ஆந்திராவில் தமிழக சட்டக் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், தமிழக மாணவர்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்த ஆந்திர போலீசாரைக் கண்டித்தும் திருத்தணியில் தமிழக சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

பதிவு:2022-10-27 13:13:44

திருவள்ளூர் அக் 27 : ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே வடமாலைப் பேட்டை சுங்கச்சாவடியில் கடந்த 23-ந் தேதி சட்டக் கல்லூரி மாணவர்கள் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் பலத்த காயம் அடைந்து திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றனர். இந்த சம்பவம் இரு மாநிலங்களுக்கிடையேயான பிரச்சினையாக உருவாகும் சூழ்நிலை நிலவியது.

இந்நிலையில் தமிழக சட்டக் கல்லூரி மாணவர்களை தாக்கியவர்கள் மீது ஆந்திர போலீசார் வழக்குப் பதிவு செய்யாமல், தமிழக சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்தது. இதனால் ஆந்திர போலீசாரைக் கண்டித்து திருத்தணியில் தமிழக சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சுங்கச்சாவடியில் தமிழக சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

தாக்குதல் சம்பவத்தின் போது வேடிக்கை பார்த்த போலீசார் மீது ஆந்திர அரசு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆந்திராவில் படிக்க செல்லும் தமிழக மாணவர்களுக்கு பாதுகாப்பை இரு மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அதனைத் தொடர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.