திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா போன்ற போதைப் பொருட்கள் விற்பனை: 5 பேர் கைது

பதிவு:2022-10-27 13:15:19



திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா போன்ற போதைப் பொருட்கள் விற்பனை: 5 பேர் கைது

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா போன்ற  போதைப் பொருட்கள் விற்பனை: 5 பேர் கைது

திருவள்ளூர் அக் 27 : தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்தாலோ, பதுக்கி வைத்திருந்தாலோ கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.

அதன்படி திருவள்ளூர் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருப்பாச்சூரில் சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல் சோதனை மேற்கொண்டார். அப்போது பஜார் தெருவில் ஃபக்ருதின் (48) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்கள் விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து விற்பனைக்காக வைத்திருந்த ஹான்ஸ் 35 பாக்கெட், கூல் லிப் 15 பாக்கெட், விமல் மசாலா 180 பாக்கெட், வி-1 189 பாக்கெட், உமா பொடி 582 பாக்கெட், எம்டிஎம் பாக்கு 7 பாக்கெட், பன்னீர் புகையிலை 28 பாக்கெட், கலவை ஹான்ஸ் 100 கிராம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக ஃபக்ருதின் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்த பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.அதே போல் பெரியபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பனப்பாக்கம் கிராமத்தில் ஹான்ஸ் பாக்கெட் 18 பறிமுதல் செய்தனர். விற்பனையில் ஈடுபட்ட சரவணன் என்பவரையும் கைது செய்தனர். வெங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூச்சி அத்திப்பேடு பகுதியில் போதைப் பொருட்களை விற்பனை செய்த ராஜ் (28) என்பவரை கைது செய்து, விற்பனைக்காக வைத்திருந்த ஹான்ஸ் 75 பாக்கெட், விமல் மசாலா 150 பாக்கெட், வி-1 பாக்கெட் 150 ஐ பறிமுதல் செய்தனர்.

அதேபோல் பொன்னேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னகாவனம் பகுதியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்த ஹரிபாபு (41) என்பவரை கைது செய்த பொன்னேரி போலீசார், அவரிடமிருந்து ஹான்ஸ் 500 கிராம், எம்டிஎம் 150 கிராம், விமல் 100 கிராம், சௌகத் ஒரு கிலோ ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் கவரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விவேகானந்தா நகரில் பில்கேஷ் (32) என்பவரை கைது செய்த கவரப்பேட்டை போலீசார், அவரிடமிருந்து மாவா 551 பாக்கெட்,மாவா சிவில் பாக்கு 8, கோபால்132 சிவிங்கம்- 1 பெட்டி, ஜர்தா 1 பாக்கெட், கிரைண்டர் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். திருவள்ளூர் மாவட்ட போலீசாரின் அதிரடி சோதனையில் 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து லட்சக் கணக்கான போதைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.