பதிவு:2022-10-27 13:18:06
பேரம்பாக்கத்தில் விற்பனைக்காக வைத்திருந்த ஒரு கிலோ 250 கிராம் கஞ்சா பறிமுதல் : 4 பேர் கைது: இரு சக்கர வாகனம் பறிமுதல்
திருவள்ளூர் அக் 27 : ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு திருத்தணி வழியாக கஞ்சா கடத்தி வருவதை தடுக்க மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் படி நேற்று கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேரம்பாக்கம், கொண்டஞ்சேரி ஆகிய பகுதிகளில் மப்பேடு சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பேரம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே கைப்பையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த ரகசிய தகவலையடுத்து போலீசார் விரைந்து சென்று பார்த்த போது ஏபி 03 பிபி 7975 என்ற இரு சக்கர வாகனத்தை வைத்துக் கொண்டு 4 பேர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.இதனையடுதது சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் அவர்களை நெருங்கிய போது 4 பேரும் தப்பி ஓட முயற்சித்தவர்களை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சுவால்பேட்டையைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சுந்தரேசன் (21), பேரம்பாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் மகன் பிரவீன் (19), பொன்பரமகுருவின் மகன் ஜஸ்வந்த் (19) மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச்சேர்ந்த சண்முகம் மகன் அஜீத் (22) என்பதும் தெரியவந்தது. இதில் ஜஸ்வந்த் மீது ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சா விற்பனை ல் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்த மப்பேடு சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.