மோவூர் பகுதியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் : பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார் :

பதிவு:2022-10-28 11:38:35



மோவூர் பகுதியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் : பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார் :

மோவூர் பகுதியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் : பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார் :

திருவள்ளூர் அக் 28 : திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஊராட்சி ஒன்றியம், மோவூர் பகுதியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.முகாமை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்து, மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் பார்வையிட்டு, கால்நடை பராமரிப்பாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் கால்நடைகளுக்கும் மருத்துவ வசதி மற்றும் பராமரிப்பு முழுமையாக கிடைக்கப்பெற வேண்டும் என்ற உணர்வின் அடிப்படையில், இவ்வகையிலான சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள கால்நடை பராமரிப்புத்துறைக்கு அறிவுறுத்தி ஆணையிட்டுள்ளார்.

நம் திருவள்ளுர் மாவட்டத்தில் மட்டும் 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் ஊராட்சி ஒன்றியத்திற்கு தலா 20 முகாம்கள் வீதம் ஒரு முகாமிற்கு ரூ.10 ஆயிரம் செலவினத்தில் 280 முகாம்கள் என ரூ.28 இலட்சத்தை மருத்துவ முகாமிற்கு ஒதுக்கி ஆணையிடப்பட்டுளளது. அந்த அளவிற்கு கால்நடைகளும் மருத்துவ வசதி பெற வேண்டும். இந்த முகாம்கள் வாயிலாக மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிக்சை, மலட்டு நீக்கம் சிகிச்சை, குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், தடுப்பூசி செலுத்துதல், சினை பரிசோதனை, கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்துதல், சுண்டு வாத அறுவை சிகிச்சை மற்றும் நோய் தீர்க்கும் நீக்கம பல்வேறு சுகாதார நடவடிக்கைகளுக்கான விழிப்புணர்வு முகாமாக இன்றைய தினம் கால்நடைகளுக்கு தமிழக அரசின் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் ஏற்படுத்துப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரிசி, பருப்பு, காய்கறி கிடைக்காத அந்த கொரோனா காலகட்டத்தில் பால் மட்டும் தினமும் காலையில் வந்து கதவு தட்டி கொடுத்த மகத்தான பணியி;ல் ஈடுபட்ட துறை பால்வளத்துறை. அதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் கால்நடை வளர்ப்பவர்கள் தான். ஒரு மாடு தன்னை வறுத்திக்கொண்டு ஒரு லிட்டர் பால் தருகிறது என்றால் தன்னுடைய 500 லிட்டர் இரத்தத்தை மறுசுழற்சி செய்து தருகிறது. அதேபோன்று கால்நடை வளர்ப்பவர்களும் அதைவிட மிகப்பெரிய தியாகிகள். அந்த தியாகத்தின் மூலம் தான் பாலை கால்நடை வளர்ப்பவர்கள் தங்களது பணியினை செய்கிறார்கள். தமிழகம் முழுவதும் உள்ள 7700-க்கும் மேற்பட்ட முகாம்களுக்கும் ரூ.7.28 கோடி ஒதுக்கி தந்த பெருமை முதல்வரையே சாரும். மேலும், நம்முடைய மாவட்டத்திற்கு மட்டும் ஏறக்குறைய ரூ.28 இலட்சம் ஒதுக்கி தந்துள்ளார். இந்த ஆண்டும் கடந்த ஆண்டைப்போலவே 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் தலா 20 முகாம்கள் வீதம் ஒரு முகாமிற்கு ரூ. 10 ஆயிரம் வீதம் 280 முகாம்களுக்கு ரூ.28 இலட்சம் செலவினத்தில் இம்முகாம்களுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் கால்நடை துறை சார்ந்துள்ள பால்வளத்துறையானது கால்நடைகளை பராமரிப்பதற்காகவும், அவைகள் மூலம் கிடைக்கும் பாலை கூட்டுறவு சொசைட்டி மூலம் எடுத்துக்கொண்டு, மாடு வாங்குவதற்கான கடன்களும் தரப்படுகிறது. அதன் மூலம் இருபக்கமும் இலாபம். எனவே, மாடுகளை முறைப்படுத்தி வளர்க்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் கால்நடை பராமரிப்பாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். கூட்டுறவே நாட்டுயர்வு. எனவே உங்களை கூட்டுறவுத்துறையில் இணைத்துகொண்டு பயனடைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து, இம்முகாமில் பால்வளத் துறை அமைச்சர் கால்நடைகளுக்கு தீவனப் பயிர்களை வழங்கி, கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க மருந்துகளை செலுத்தினார். தொடர்ந்து, இம்முகாமில் கால்நடை பராமரிப்பில் முன்னோடியாக விளங்கும் சிறந்த விவசாயிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களையும், கிடாரி கன்றுகள் பராமரிப்பில் முன்னோடியாக விளங்கும் சிறந்த கால்நடை பராமரிப்பாளர்களுக்கு பரிசுகளையும் பால்வளத் துறை அமைச்சர் வழங்கினார்.

இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூர்), எஸ்.சந்திரன் (சந்திரன்), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரும் கூடுதல் ஆட்சியருமான செ.ஆ.ரிஷப்,கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் மு.ராஜேந்திரன், பூண்டி வட்டார கால்நடை மருத்துவர்கள் சரவணக்குமார், ஹரிஹரன், சிவசங்கர், சரவணக்குமார், ஷர்மிளா மற்றும் நோய் புலனாய்வு பிரிவைச் சேர்ந்த மருத்துவர்கள் செல்வபிரியா, பிரேம், ஷாருணி, சத்யப்பிரியா மற்றும் ஒன்றிய திமுக நிர்வாகிகள் பட்டரை கே.பாஸ்கர், ஆனந்த், லக்ஷ்மணன், நடராஜன், மாவட்ட பிரதிநிதிகள் மோவூர் கோ.டில்லிபாபு, தேவேந்திரன் சௌக்கர் பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் உ.சிவசங்கரி உதயகுமார், மோவூர் கிளை நிர்வாகிகள் இரா.உதயா, வேணு, முத்துலிங்கம், வேலு, சுரேஷ், எஸ்.தசரதன், பழனி, இ.டில்லி, ஜெயலிங்கம், மகேந்திரன், சந்தானம், கருணா, மொராஜ், தில்லன், கணேசன், ஆனந்தன், கேசவன், விஸ்வநாதன், தில்லையன், சுரேஷ், நந்தகுமார், சரவணன், ராஜாராம், விவசாயிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.