திருவள்ளூர் அருகே இளம் பெண் திருமணம் விவகாரத்தில் பஞ்சாயத்து செய்ய சென்றவர்களை காவல் துறையினர் கைது செய்ததைக் கண்டித்து 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியல் : 3 கி.மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு

பதிவு:2022-10-28 14:47:13

திருவள்ளூர் அக் 28 : திருவள்ளூர் அடுத்த வெங்கத்தூர் கண்டிகை மதுரா பட்டரை கிராமத்தைச் சேர்ந்தவர் வரதராஜ். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களது மகள் சங்கீதா பிரியா. இவர் மாற்று சமூகத்தைச் சேர்ந்த ராம் என்பவரை காதலித்து 3 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு திருமணம் செய்துள்ளார். அலைபாயுதே பாணியில் இருவரும் அவரவர் வீட்டில் வசித்து வந்த நிலையில் செல்போனில் இருவரும் பேசியதால் மூன்று மாதத்திற்கு பிறகு பெண்ணின் பெற்றோருக்கு திருமணம் செய்தது தெரிய வந்தது. இதனால் இரு வீட்டாரிடம் சமாதானம் பேச பெண்ணின் பெற்றோர் கிராம பஞ்சாயத்தார் வெங்கடேசன் மற்றும் சங்கர் ஆகியோரை அணுகியுள்ளனர். இதனையறிந்த ராம் மற்றும் சங்கீதா பிரியா இருவரும் வீட்டிற்கு தெரியாமல் மீண்டும் ஓட்டம் பிடித்தனர். இதனால் ராம் பெற்றோரிடம் கிராம பஞ்சாயத்தார் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர். ஆனால் பேச்சுவார்த்தைக்கு வராமல் மீன் கடை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்த ராமனின் தாய் லட்சுமியிடம் பஞ்சாயத்தார் சென்று கேட்டுள்ளனர். ஆனால் ராம்-ன் தாய் லட்சுமி, கிராம பஞ்சாயத்தார் மீது மணவாளநகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரியில் பஞ்சாயத்தார் வெங்கடேசன் மற்றும் சங்கர் ஆகியோரை இன்று அதிகாலை 3 மணி அளவில் கைது செய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் ஸ்ரீபெரும்புதூர் சாலை பட்டரை பேருந்து நிறுத்தம் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் ஏஎஸ்பி விவேகானந்தசுக்லா, தாலுக்கா இன்ஸ்பெக்டர் கமலஹாசன் மற்றும் போலீசால் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

இது குறித்து தீர விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் ஏஎஸ்பி. விவேகானந்த சுக்லா உறுதியளித்ததையடுத்து சாலை மறியலை கைவிட்டனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீட்டித்த இந்த சாலை மறியலால் திருவள்ளூர் ஸ்ரீபெரும்புதூர் சாலையில் சுமார் இரு புறமும் 3 கி.மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.