பதிவு:2022-04-09 15:22:14
திருவள்ளூரில் மாபெரும் புத்தக திருவிழாவின் 8-ஆம் நாளில் ஊரெல்லாம் நீர் நிலை “ஊர் கூடி காப்போம்” என்ற இலட்சி : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டார் :
திருவள்ளூர் ஏப் 09 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாபெரும் புத்தக திருவிழா - 2022 மற்றும் பல்துறை பணிவிளக்க கண்காட்சியின் 8-ஆம் நாளில் அரங்குகளில் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ள புத்தகங்களை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட இளைஞர்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் என சுமார் 6000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் புத்தக கண்காட்சிக்கு வருகை புரிந்து சுமார் ரூ.12 இலட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையானதை தொடர்ந்து அனைவரின் பங்களிப்புடன் நீர்நிலைகள் தூர்வாரி நிலத்தடி நீரினை உயர்த்தவும், மரங்கன்றுகள் நட்டு பராமரிக்கவும், ஊக்கப்படுத்தும் வகையில் ஊரெல்லாம் நீர் நிலை “ஊர் கூடி காப்போம்” என்ற இலட்சியினை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் டாக்டர்.இரா.ஆனந்தகுமார் முன்னிலையில் வெளியிட்டார்.
முன்னதாக பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்றது. தொடர்ந்து, பொதுமக்களிடம் வாசிப்பு பழக்கத்தினை அதிகப்படுத்தும் வகையில் “வாசிக்கலாம் வாங்க” என்ற தலைப்பில் தொடர்ந்து 15 நிமிடங்கள் புத்தகங்கள் வாசிக்கும் வாசகர்களுக்கு தினந்தோறும் சிறப்பு பரிசுகள் வழங்கும் திட்டத்தினை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, உழவர் பெருமக்களுக்கு நிலத்தடி நீரினை உயர்த்துவதற்காகவும், நீரிநிலைகளை பராமரிக்கவும், மரங்கன்றுகள் நட்டு கரைகளைப் பலப்படுத்த ஊக்கப்படுத்தும் வகையில்; வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பாக 2 விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளும், ஒரு விவசாயிக்கு ரூ. 15 ஆயிரம் மதிப்பிலான பனைமர விதைகளும், கரும்பு சாகுபடி திட்டத்தின் மூலம் ஒரு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் வீதம் 3 விவசாயிகளுக்கு ரூ. 75 ஆயிரம் மதிப்பிலான பருசீவல் குழித்தட்டு நாற்றுகளும், தோட்டக்கலைத்துறை சார்பாக ஒரு விவசாயிக்கு ரூ.15 ஆயிரம் மதிப்பிலான பப்பாளி மரக்கன்றுகளும் என சுமார் ரூ.1 இலட்சம் மதிப்பிலான பல்வேறு விவசாய மரக்கன்றுகள் மற்றும் விதைகளை விவசாயிகளுக்கு வழங்கினார்.
தொடர்ந்து, வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பாக அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் கல்விக்காக ரூ.1 இலட்சம் மதிப்பீட்டிலான புத்தகங்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். பின்னர் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக நடைபெற்ற பெரிய வகை, நடுத்தர வகை, சிறிய வகை மற்றும் நாட்டினம் என்ற நான்கு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற செல்லப் பிராணிகள் (நாய்களுக்கான பிரத்யேக கண்காட்சியில் ஜெர்மன் செப்பேடு, டாபர்மேன், லேபர்டா, மேஷ்டிப், பொம்மரேணியன், பீகல், கிரேட்டன், பக் போன்ற வெளிநாட்டு இனங்களும், ராஜபாளையம், சிப்பிபாறை, கன்னி போன்ற நாட்டு இன வகை செல்லப்பிராணிகள் (நாய்கள்) பங்கு பெற்றது. அதனைத் தொடர்ந்து நாய்களின் கண்காட்சி அணிவகுப்பு நடைபெற்றது.
அதனைத் தொடாந்து கால்நடை பராமரிப்புத்துரை மருத்;துவர்கள் அடங்கிய தேர்வு குழவினரால் தேர்வு செய்யப்பட்டு வெற்றி பெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக வழங்கப்பட்டது.பின்னர் “கவிதை வாங்க வரலாம்” என்ற தலைப்பில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் டாக்டர்.இரா.ஆனந்தகுமார் கருத்துரை வழங்கினார். தொடர்ந்து, “வள்ளுவன் என்னும் ஆசான்” என்ற தலைப்பில் பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் கருத்துரை வழங்கினர்.
இதில் திருவள்ளூர் மாவட்ட சார் ஆட்சியர் (பயிற்சி) ஏ.பி.மகாபாரதி,கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மண்டல மேலாளர் ஜெ.சேகர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ப.அ.ஆறுமுகம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எபினேசன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மணிவண்ணன், தோட்டக்கலை துணை இயக்குநர் ஐ.ஜெபக்குமாரி அனி, வேளாண் துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) ராஜேஷ்வரி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கூ.பாபு, மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.