கே.ஜி.கண்டிகையில் படியில் பயணம் செய்த மாணவர்களை உள்ளே வர சொன்ன அரசு பஸ் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது பள்ளி மாணவர்கள் தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு

பதிவு:2022-10-31 11:36:04

திருவள்ளூர் அக் 29 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து, அரசு பேருந்து தடம் எண்: டி.27ஏ என்ற பேருந்து, திருத்தணியில் இருந்து கே.ஜி.கண்டிகை, நொச்சலி வழியாக அத்திமாஞ்சேரிபேட்டை வரை இயக்கப்படுகிறது.

இந்நிலையில், வழக்கம் போல், இந்த பேருந்து இயக்கப்பட்டது. பேருந்தின் நடத்துனராக குப்பைய்யா என்பவரும் ஓட்டுனராக ஹேமாத்திரி ஆகியோரும் பணியில் இருந்தனர். காலை திருத்தணியிலிருந்து, அத்திமாஞ்சேரிபேட்டை நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது கே.ஜி.கண்டிகை பேருந்து நிறுத்தத்தில், நான்கு பள்ளி மாணவர்கள் பேருந்தில்ஏறினர். பேருந்து காலியாக இருந்தும், மாணவர்கள் உள்ளே வராமல் படியில் ஆபத்தான நிலையில் தொங்கியப்படி பயணம் செய்தனர். ஓட்டுனர் ஹேமாத்திரி, மாணவர்களை பார்த்து உள்ளே ஏறி வர வேண்டும் என கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த மாணவர்கள் ஓட்டுனரை சராமரியாக தாக்கிவிட்டு தப்பியோடினர். இதனால் ஒன்றரை மணி நேரம் பேருந்து நிறுத்தப்பட்டது. பின் போலீசார் சமரசம் செய்த பின், ஓட்டுனர் பேருந்தை இயக்கினார். அரசு பேருந்துகளில் மாணவர்கள் செய்யும் அட்டகாசத்தில் அரசு டவுன் பேருந்துகளை இயக்குவதற்கு ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் அச்சப்படுவதாக, திருத்தணி போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து ஓட்டுனர் ஹேமாத்ரி திருத்தணி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.