திருத்தணியில் போக்குவரத்து ஆய்வாளர் வாகன ஓட்டிகளுக்கு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு

பதிவு:2022-10-31 11:38:52

திருத்தணியில் போக்குவரத்து ஆய்வாளர் வாகன ஓட்டிகளுக்கு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு

திருத்தணியில் போக்குவரத்து ஆய்வாளர் வாகன ஓட்டிகளுக்கு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு

திருவள்ளூர் அக் 29 : தமிழக அரசின் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வந்தது. இதையடுத்து விதிகளை மீறுவோரிடம் நிர்ணயிக்கப்பட்ட அபராதத் தொகை வசூலிக்கப்படும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனையடுத்து திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஞானவி தலைமையில் போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். திருத்தணி - சித்தூர் சாலையில் வரும் வாகன ஓட்டிகளை மடக்கி ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்றும், அணியாதவர்களுக்கு கடந்த காலத்தில் 100 ரூபாய் என்று இருந்ததை தற்போது 1000 ரூபாயாக உயர்த்தி இருப்பதால் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என வலியுறுத்தினார்.

இன்சூரன்ஸ் புதுப்பிக்க 2 ஆயிரம் மட்டுமே செலவு ஆகும் நிலையில் அது இல்லாமல் போனால் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்தார். மேலும், சிறுவர்களிடம் வாகனத்தை ஓட்ட அனுமதித்தால் பெற்றோர்கள் தான் ஜெயிலுக்கு போக வேண்டியிருக்கும் எனவும் எச்சரித்து அரசின் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு எடுத்துச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.