பதிவு:2022-10-31 15:09:01
சிற்றம்பாக்கம் ஊராட்சியில் இலவச பல் மருத்துவ முகாம் -200- க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன் பெற்றனர்
திருவள்ளூர் நவ 01 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிற்றம்பாக்கம் ஊராட்சியில் இலவச பல் மருத்துவ முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ரமணி சீனிவாசன் தலைமை தாங்கினா். ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் லட்சுமி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயாளர் சுகுமார் வரவேற்றார்.
சிற்றம்பாக்கம் கிராம மக்கள் பயன்பெறும் வகையில் ஊராட்சி மன்றத் தலைவர் ரமணி சீனிவாசன் பொது மருத்துவ முகாம் கண் சிகிச்சை முகாம் பல் சிகிச்சை முகாம் உள்ளிட்ட பல்வேறு முகாம்களை நடத்தி வருகிறார்.இந்த நிலையில் பாண்டூரில் உள்ள பிரியதர்ஷினி பல் மருத்துவர் கல்லூரி மருத்துவமனை மற்றும் பூவிருந்தவல்லி ராஜலட்சுமி மருத்துவமனை ஆகியவற்றை ஒருங்கிணைத்து கிராம மக்களுக்கு இலவச பல் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.
இம்முகாமில் வாய்ப்புண் சொத்தை பல் ஈறு பிரச்சனைகள், வாய் மற்றும் பல் தொடர்பான பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இம் முகாமில் 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்த முகாமில் ராஜலட்சுமி குழுமத்தின் மேலாளர் தேவநாதன் தலைமையில் மருத்துவக் குழுவினர் பங்கேற்று சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் வெங்கடேசன் கஸ்தூரி ஏழுமலை இந்துமதி தமிழரசன் பிரதாப் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் கலந்து கொண்டனர்.