திருத்தணியில் உடற்பயிற்சி செய்வதை கட்டாயமாக்கி கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி என்.சி.சி. மாணவர்களின் விழிப்புணர்வு ஒற்றுமை ஓட்டம்

பதிவு:2022-10-31 15:15:55

திருவள்ளூர் அக் 30 : மக்கள் மத்தியில் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதை ஊக்குவிக்கும் வகையில் ஃ பிட் இந்தியா இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடிதொடங்கி வைத்து, உடற்பயிற்சி செய்வோம் என்ற உறுதி மொழியை நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் தமிழ்நாடு பட்டாலியன் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) காஞ்சிபுரம் சார்பில் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி என்.சி.சி. மாணவர்கள் மற்றும் திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு மேனிலை பள்ளி என்.எஸ்.எஸ். மாணவர்கள் இணைந்து தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதை கட்டாயமாக்கி கொள்ள வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு ஒற்றமை ஓட்டம் ஆண்கள் மேனிலை பள்ளியில் நடந்தது.

பேரணி பழைய சென்னை சாலை, பைபாஸ் சாலை வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. பேரணியின்போது, அன்றாட வாழ்வில் உடற்பயிற்சியும் அங்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஒற்றமை ஓட்டம் நடைபெற்றது. உடற்பயிற்சி என்பது விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் ஆனது என்பதால் அதை நாள்தோறும் தவறாமல் செய்ய வேண்டும் என அரசு கல்லூரி தேசிய மாணவர் படை அலுவலர் ஹேமாநாதன் மாணவர்களிடம் வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் அரசு ஆண்கள் மேனிலை பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியம், தேசிய மாணவர் படை முதன்மை அலுவலர் உமாபதி உள்பட 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர்.