திருமழிசை பேரூராட்சியில் வீட்டுமனை பிரிவுகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதாக 9 வது வார்டு உறுப்பினர் ரவி ராஜேஷ் மாவட்ட ஆட்சியரிடம் புகார்

பதிவு:2022-11-01 16:21:52



திருமழிசை பேரூராட்சியில் வீட்டுமனை பிரிவுகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதாக 9 வது வார்டு உறுப்பினர் ரவி ராஜேஷ் மாவட்ட ஆட்சியரிடம் புகார்

திருமழிசை பேரூராட்சியில் வீட்டுமனை பிரிவுகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதாக 9 வது வார்டு உறுப்பினர்  ரவி ராஜேஷ் மாவட்ட ஆட்சியரிடம் புகார்

திருவள்ளூர் நவ 01 : திருமழிசை பேரூராட்சியில் வீட்டுமனைப் பிரிவுகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் பல கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக வார்டு உறுப்பினர் ரவி ராஜேஷ் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் இடம் புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது. திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி அடுத்த திருமழிசை பேரூராட்சியின் 9-வது வார்டுக்கு உட்பட்ட பிராயம்பத்து கிராமத்தில் அப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, பொழுது போக்கு பூங்கா, குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அங்கன்வாடி மற்றும் பொதுக் கழிப்பிடம், பொதுவிநியோக கடை ஆகியவற்றை அமைப்பதற்கு பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால் தற்போது பிரயாம்பத்து பகுதியில் பல அரசு நிலங்கள் இருப்பதால் மக்களுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். இதற்கான பணிகளை மேற்கொள்ள பேரூராட்சி நிர்வாகத்தின் அரசின் பார்வைக்கு சென்று ஒப்புதல் பெறப்பட்டது. இந்நிலையில் வீட்டுமனைப் பிரிவுகளை விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள் அவர்களது நிலத்தின் அருகில் இருக்கும் பல கோடி ரூபாய் மதிப்பிலான அரசு புறம்போக்கு நிலத்தையும் ஆக்கிரமித்து சுற்றுச் சுவர் எழுப்பி வருகிறது.

இதனால் பொது மக்களின் அடிப்படை தேவையான பொது கிழிப்பிட வசதி இல்லாததால் புதர்களையும், கழனிகளையும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பிராயம்பத்து பகுதியில் பொது கழிப்பிடம் வேண்டி பேரூராட்சி நிர்வாகத்திடம் 9-வது வார்டு உறுப்பினர் ரவி ராஜேஷ் மனு அளித்திருந்தார். ஆனால் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததால் பொது கழிப்பிடம் கட்டுவதற்கு கூட போராட வேண்டியிருக்கிறது.

எனவே திருமழிசை பேரூராட்சிக்குட்பட்ட 9-வது வார்டில் உள்ள பிரயாம்பத்து கிராமத்திற்குட்பட்ட திலகர் தெரு, பட்டேல் தெரு, மேட்டுத்தாங்கள் ஆகிய பகுதிகளில் அரசுக்கு சொந்தமான நிலத்தை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து இருப்பதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்பு நிலங்களை அடையாளம் கண்டு, நிலங்களை அளந்து, நிலக்கல் நட்டு, சுற்றி கம்பி வேலி மற்றும் அறிவிப்பு பலகை அமைத்து தர வேண்டும் என வார்டு உறுப்பினர் ரவி ராஜேஷ் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.