திருவள்ளூரில் மாபெரும் புத்தக திருவிழாவின் நிறைவு நாள் : மது மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “நீயே ஒளி” என்ற இலட்சி : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டார் : திருவள்ளூர் ஏப் 13 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாபெரும் புத்தக திருவிழா - 2022 மற்றும் பல்துறை பணிவிளக்க கண்காட்சியின் நிறைவு நாள் நடைபெற்றது.

பதிவு:2022-04-13 19:55:50



திருவள்ளூரில் மாபெரும் புத்தக திருவிழாவின் நிறைவு நாள் : மது மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படு திருவள்ளூர் ஏப் 13 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாபெரும் புத்தக திருவிழா - 2022 மற்றும் பல்துறை பணிவிளக்க கண்காட்சியின் நிறைவு நாள் நடைபெற்றது.

திருவள்ளூரில் மாபெரும் புத்தக திருவிழாவின்  நிறைவு நாள் : மது மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “நீயே ஒளி” என்ற இலட்சி : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டார் :

திருவள்ளூர் ஏப் 13 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாபெரும் புத்தக திருவிழா - 2022 மற்றும் பல்துறை பணிவிளக்க கண்காட்சியின் நிறைவு நாள் நடைபெற்றது.

திருவள்ளூரில் மாபெரும் புத்தக திருவிழாவின் நிறைவு நாள் : மது மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்துதிருவள்ளூர் ஏப் 13 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாபெரும் புத்தக திருவிழா - 2022 மற்றும் பல்துறை பணிவிளக்க கண்காட்சியின் நிறைவு நாள் நடைபெற்றது.

விழாவில் புத்தக கண்காட்சி குறித்து முழு விவரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் “அறிவென்ற ஆயுதம் கொள்” என்ற குறுந்தகட்டினையும், பொதுமக்களிடையே மது மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “நீயே ஒளி” என்ற இலட்சியினையும், தனியார் துறையின் பங்களிப்புடன் நூலகங்களை பராமரிக்கும் திட்டத்தின் கீழ் “நம்ம ஊரு நம்ம நூலகம்” என்ற இலட்சியினையும், குழந்தைகளிடையே புத்தகம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் 2023-ம் ஆண்டில் நடைபெறவுள்ள புத்தக திருவிழாவில் புத்தகங்களை வாங்குவதற்கு தேவையான தொகையினை சேமிப்பதற்காகவும் “எங்கள் உண்டியல் எங்க புத்தகம்;” என்ற இலட்சியினையும் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.வீ.வருண் குமார் முன்னிலையில் வெளியிட்டு, “எங்கள் உண்டியல் எங்க புத்தகம்;” என்ற திட்டத்தினை துவங்கி வைக்கும் விதமாக 10 குழந்தைகளுக்கு, உண்டியல்களை வழங்கினார்.

தொடர்ந்து “சுவாசிக்காவிட்டாலும் வாசியுங்கள்” என்ற தலைப்பில் சொற்பொழிவாளர் நாஞ்சில் சம்பத் கருத்துரை வழங்கினார். தொடர்ந்து, உயிர்த்தமிழ்;” என்ற தலைப்பில் பாடலாசிரியர் பாவலர் அறிவுமதி கருத்துரை வழங்கினார்.முன்னதாக,75-வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா கொண்டாட்டங்களை தொடர்ந்து செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக நடைபெறும் பல்துறை பணிவிளக்க புகைப்படக் கண்காட்சியின் பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளை ஆட்சியர் பார்வையிட்டார்.

பின்னர் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்களை தொடர்ந்து செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக சுதந்திர போராட்ட தியாகிகள் குறித்து பள்ளி மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கும், பல்வேறு துறைகளின் சார்பாக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை வெளிப்படுத்தும் வகையில் அரங்கங்கள் அமைக்கப்பட்டதில் சிறப்பான முறையில் அரங்கம் அமைத்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறைக்கு “சிறந்த அரங்க வடிவமைப்பாளர் விருது மற்றும் சான்றிதழை” ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை செயற்பொறியாளர் வி.ராஜவேல் அவர்களிடமும், அரங்கங்கள் அமைக்கப்பட்டதில் சிறப்பான முறையில் காட்சிப்படுத்தப்பட்ட வேளாண் - உழவர் நலத்துறைக்கு “சிறந்த காட்சி ஆக்குநர் விருது மற்றும் சான்றிதழை” மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எபினேசன் அவர்களிடமும், அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை வெளிப்படுத்தும் வகையில் அரங்கங்கள் அமைக்கப்பட்டதில் சிறப்பான முறையில் காட்சிப்படுத்தப்பட்ட தோட்டக்கலைத் துறைக்கு “சிறந்த காட்சி ஆக்குநர் விருது மற்றும் சான்றிதழை” தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி.ஐ.ஜெபக்குமாரி அனி அவர்களிடமும், அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை வெளிப்படுத்தும் வகையில் அரங்கங்கள் அமைக்கப்பட்டதில் சிறப்பாக திட்டங்களை செயல்படுத்தி காட்டிய கால்நடை பராமரிப்புத் துறைக்கு “சிறந்த செயல்பாட்டாளர் விருது மற்றும் சான்றிதழை” கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மு.ராஜேந்திரன் அவர்களிடமும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். விழாவில்; பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட இளைஞர்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான வாசகர்கள் என இதுநாள் வரை சுமார் 1,50,000 பார்வையாளர்கள்; கலந்துகொண்டு, அரங்குகளை பார்வையிட்டனர். இதன் மூலம் ரூ.1.30 கோடி மதிப்பிலான 8 இலட்சம் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதில் திருவள்ளூர் மாவட்ட சார் ஆட்சியர் (பயிற்சி) ஏ.பி.மகாபாரதி,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ப.அ.ஆறுமுகம், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மு.ராஜேந்திரன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ச.கண்ணன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை செயற்பொறியாளர் வி.ராஜவேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எபினேசன், தோட்டக்கலை துணை இயக்குநர் ஐ.ஜெபக்குமாரி அனி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மணிவண்ணன், டி.ஜெ.எஸ். கல்வி குழும இயக்குநர் டி.ஜெ.ஜி.தமிழரசன், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்க துணைத் தலைவர் மயிலவேலன், சங்க செயலாளர் எஸ்.கே.முருகன், பொருளாளர் ஏ.குமரன்,வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கூ.பாபு, பள்ளி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், வாசகர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.