திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டில் இருசக்கர வாகனத்தில் சென்றவரை சரமாரியாக வெட்டி கொலை செய்த பிரபல ரவுடியின் கூட்டாளிகள் 3 பேர் கைது

பதிவு:2022-11-07 12:47:39



திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டில் இருசக்கர வாகனத்தில் சென்றவரை சரமாரியாக வெட்டி கொலை செய்த பிரபல ரவுடியின் கூட்டாளிகள் 3 பேர் கைது

திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டில் இருசக்கர வாகனத்தில் சென்றவரை சரமாரியாக வெட்டி கொலை செய்த பிரபல ரவுடியின் கூட்டாளிகள்  3 பேர் கைது

திருவள்ளூர் நவ 07 : திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேப்பம்பட்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசனும் அதே பகுதியைச்சேர்ந்தவர் தேவாவும் நேற்று மாலை வேப்பம்பட்டில் இருந்து செவ்வாபேட்டை நோக்கி டன்லப் நகர் அயத்தூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் முருகேசனை கழுத்து, தலை, கை, கால் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சரமாரியாக வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து முருகேசன் உயிரிழந்தார். இதனையடுத்து அந்த 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி சரக காவல் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டி மற்றும் செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையிலான போலீசார் முருகேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருசக்கர வாகனத்தில் வந்த அந்த மூன்று பேர் யார்? எதற்காக சரமாரியாக வெட்டி கொலை செய்தார்கள் என்பது குறித்து கொலை சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு செவ்வாபேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த 2020-ல் முருகேசனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் சரவணன்(23), பாபு மகன் பார்த்திபன் (22) ஆகியோருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது முருகேசனை இவர்கள் இருவரும் கத்தியால் குத்த முயன்ற போது அதை பிடுங்கி சரவணன், மற்றும் பார்த்திபனை முருகேசன் குத்தியதில் பலத்த காயம் அடைந்ததாகவும் அதனால் பழிக்குப் பழியாக இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதில் சரவணன், பார்த்திபன் மற்றும் இவர்களது கூட்டாளியான திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ராஜியின் மகன் வினோத்குமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். தொடர் விசாரணையில் செவ்வாப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேப்பம்பட்டு பகுதியில் உள்ள பிரபர ரவுடியின் கூட்டாளிகான சரவணன், பார்த்திபன் மற்றும் வினோத் குமார் ஆகிய 3 பேரும் தங்களை ரவுடிகளாக அந்த பகுதியில் அடையாளம் காட்டிக் கொள்ளவே இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட3 பேரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.