விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரின் மணி விழா மற்றும் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை நிர்வாகி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாரத்தான் போட்டி

பதிவு:2022-11-07 13:00:50



விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரின் மணி விழா மற்றும் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை நிர்வாகி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாரத்தான் போட்டி

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரின் மணி விழா மற்றும் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை நிர்வாகி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாரத்தான் போட்டி

திருவள்ளூர் நவ 07 : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான திருமாவளவன் மணி விழா மற்றும் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணைச் செயலாளர் தளபதி சுந்தர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சமூக நீதி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகில் இருந்து சிறுவர் சிறுமிகள் மற்றும் இளைஞர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் உடன் சமூக நல்லிணக்க மாரத்தான் போட்டி நடைபெற்றது.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் அ.பாலசிங்கம் கலந்துகொண்டு கொடியசைத்து மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார். கடம்பத்தூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகில் இருந்து பிரையாங்குப்பம் திருப்பாச்சூர் வழியாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே வந்து மாரத்தான் போட்டி நிறைவடைந்தது.

இதை தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரமாண்ட கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது இதை தொடர்ந்து மாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடி வந்த அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன

இந்நிகழ்ச்சியில் மாநில துணைச் செயலாளர்கள் மதுரை மாலின், தூத்துக்குடி விமல் வங்காளியர், வேலூர் வழக்கறிஞர் ராமச்சந்திரன், நிர்வாகிகள் இலுப்பூர் அ.எட்டி, திருநின்றவூர் இரா.அன்புசெழியன், கொட்டையூர் செந்தில், பூண்டி வே.ராஜா, வயலூர் ராஜா, சிறுகடல் வழக்கறிஞர் ம.சதீஷ்குமார், தண்ணீர்குளம் பாரதிதாசன், எறையூர் சுதாகர், கல்யாணகுப்பம் அ.ஏ.நாகராசு, சேலை அன்பு, ம.தினேஷ்குமார், ஜேக்கப், செஞ்சி திலீப், பாலாஜி, சத்தியராஜ், அரண்வாயல் நிர்மல், அருண்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.