பாப்பரம்பாக்கம் பகுதியில் ரூ.21.88 கோடி மதிப்பீட்டில் 110 கி.வோ. துணை மின் நிலையம் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

பதிவு:2022-11-07 22:41:21



பாப்பரம்பாக்கம் பகுதியில் ரூ.21.88 கோடி மதிப்பீட்டில் 110 கி.வோ. துணை மின் நிலையம் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

பாப்பரம்பாக்கம் பகுதியில் ரூ.21.88 கோடி மதிப்பீட்டில் 110 கி.வோ. துணை மின் நிலையம் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

திருவள்ளூர் நவ 07 : திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், பாப்பரம்பாக்கம் பகுதியில் ரூ.21.88 கோடி மதிப்பீட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 110 கி.வோ. துணை மின் நிலையம் உட்பட ரூ.594.97 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 14 புதிய துணை மின் நிலையங்கள் மற்றும் 57 துணை மின் நிலையங்களில் திறன் உயர்த்தப்பட்ட மின் மாற்றிகளின் செயல்பாட்டினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, அத்துணை மின் நிலையத்தில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் மின் விநியோகத்தை துவக்கி வைத்து, பார்வையிட்டார்.

மேலும் திருவள்ளூர் மாவட்டம் - பாப்பரம்பாக்கம் சிட்கோ செம்பரம்பாக்கம் மற்றும் வேலூர் மாவட்டம் - மேல்பாடி ஆகிய இடங்களில் 46 கோடியே 71 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மூன்று புதிய 110 கி.வோ துணை மின் நிலையங்கள், திருவள்ளூர் மாவட்டம் - பொன்னியம்மன் நகர் மற்றும் வேலூர் மாவட்டம் - மடையப்பட்டு ஆகிய இடங்களில் 26 கோடியே 96 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மூன்று 33 கி.வோ துணை மின் நிலையங்கள் என மொத்தம் 373 கோடியே 22 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 14 புதிய துணை மின் நிலையங்களை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திருவள்ளுர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், பாப்பரம்பாக்கம் பகுதியில் எரிசக்தித் துறை சார்பில் ரூ.21.88 கோடி மதிப்பீட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 110 கி.வோ. துணை மின் நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்ததைத் தொடர்ந்து, மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் பாப்பரம்பாக்கம் துணை மின் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மின் விநியோகத்தை துவக்கி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

பாப்பரம்பாக்கம் பகுதியில் 110 கி.வோ துணை மின் நிலையம் தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கி வைக்கப்பட்டதன் மூலம் பாப்பரம்பாக்கம், கொப்பூர், வெள்ளேரிதாங்கல். இலுப்பூர், போளிவாக்கம் சத்திரம். வலசைவெட்டிகாடு உள்ளிட்ட 20-க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் மின் விநியோகமானது குறைந்த மின் அழுத்தம் நிலையிலிருந்து சீரான அளவில் மின் விநியோகம் அளிக்கப்படும். இப்பாப்பரம்பாக்கம் துணை மின் நிலையத்தின் மூலம் 2000-த்திற்கும் மேற்பட்ட வீடுகளும், வணிக வளாகங்களும். தொழிற்சாலைகளும் சீரான மின்சார வசதி பெற இயலும்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, எரிசக்தித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ரமேஷ்சந்த் மீனா,தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் தலைவர்,தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் மா.இராமச்சந்திரன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இயக்குநர் (பகிர்மானம்) மா.சிவலிங்கராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், பாப்பரம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூர்), எஸ்.சந்திரன் (திருத்தணி), கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் செ.ஆ.ரிஷப்,மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேசிங்கு, உதவி ஆட்சியர் (பயிற்சி) கேத்தரின் சரண்யா,தமிழ்நாடு மின்சார வாரியம் செயற்பொறியாளர் கனகராஜ், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.