பதிவு:2022-11-07 22:57:12
திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைகேள் முகாம் நாளை நடைபெறவுள்ளது : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்
திருவள்ளூர் நவ 07 : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 526 கிராம ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதிதிட்டத்தின் கீழ் பணிபுரியும் மாற்றுத்திறாளிகளுக்கு குறைகேள் முகாம் இரு மாதங்களுக்கு ஒருமுறை இரண்டாவது செவ்வாய்க்கிழமை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முன்னிலையில் மாவட்ட அளவிலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் பிரதிமாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை வட்டார அளவிலும் நடத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 08.11.2022 (செவ்வாய்க்கிழமை),நாளை பிற்பகல் 4 மணியளவில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி),திட்ட இயக்குநர் அவர்களின் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் குறைகேள் முகாம் நடத்தப்படவுள்ளது.
மேலும், அன்றே காலை அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) தலைமையில் மாற்றுத்திறனாளிகள் குறைகேள் முகாம் நடத்தப்படும்.எனவே, மாற்றுத்திறனாளிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்பான குறைகள் ஏதும் இருப்பினும் இக்குறைகேள் முகாம்களில் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து தீர்வு கண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.