பதிவு:2022-11-09 08:58:48
கோவையில் கார் வெடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தபடும் நிலையில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் போலீசார் தீவிர சோதனை : போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட பூந்தமல்லி நீதிமன்றம்
திருவள்ளூர் நவ 08 : கோவையில் கார் வெடித்த சம்பவத்தில் ஆறு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில் கோவை சிறையிலிருந்து ஆறு பேரை நேற்று இரவு புழல் சிறைக்கு அழைத்து வரப்பட்டனர்.
இன்று காலை ஆறு பேரையும் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ள நிலையில் நீதிமன்ற வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது நீதிமன்றத்திற்கு செல்லக்கூடிய வாகனங்கள் மற்றும் நபர்கள் அனைவரும் பலத்த சோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர்.
முன்னதாக வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் அந்த பகுதி முழுவதும் தீவிர சோதனை செய்தனர். நீதிமன்றத்திற்கு செல்லக்கூடிய அனைவரின் ஆவணங்கள் சரிபார்த்து பெயர், முகவரியை எழுதிய வாங்கிய பிறகு அனுமதிக்கப்படுகின்றனர். நீதிமன்றம் முழுமையும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.