திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் சார்பில் சட்ட விழிப்புணர்வு பேரணி : திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.செல்வசுந்தரி கொடியசைத்து துவக்கி வைத்தார்

பதிவு:2022-11-09 16:50:54

திருவள்ளூர் நவ 10 : தேசிய சட்டப் பணிகள் ஆணை குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வழிகாட்டுதலின் பெயரில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 9 ம் தேதி தேசிய சட்டப் பணிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் சார்பில் தேசிய சட்டப் பணிகள் தினத்தை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு பேரணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்து துவங்கி நடைபெற்றது. பேரணியை திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.செல்வசுந்தரி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பேரணியில் நீதிபதிகள்,திருவள்ளூர் தாலுகா நீதிமன்ற அரசு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள், சென்னை டாக்டர்.அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மற்றும் ஆவடி வேல்டெக் கல்லூரி மாணவர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டு சட்ட விழிப்புணர்வு பதாகைகளை மாணவர்கள் கைகளில் ஏந்தி,கோஷங்களை எழுப்பியவாறு முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.மேலும் பொதுமக்களுக்கான இலவச சட்ட விழிப்புணர்வு பிரசுரங்கள் விநியோகித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த பேரணியில் திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும்,மூத்த உரிமையியல் நீதிபதியுமான சாண்டில்யன்,மூத்த வழக்கறிஞர் டி.சீனிவாசன், திருவள்ளூர் தாலுகா நீதிமன்ற நீதிபதிகள் மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி, முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி, மாவட்ட மோட்டார் வாகன விபத்து சிறப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி, குடும்ப நல நீதிமன்ற நீதிபதி, மாவட்ட உரிமையியல் நீதிபதி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி,சார்பு நீதிமன்ற நீதிபதி, மாவட்ட உரிமையியல் நீதிபதி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி, குற்றவியல் நீதிமன்ற நீதித்துறை நடுவர்கள் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.