பதிவு:2022-11-10 07:22:10
திருத்தணியில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு வழங்கிய மதிய உணவில் மீதமான உணவை சாலையோரத்தில் கொட்டியதும், அதனை நாயும், மனநலம் பாதிக்கப்பட்ட மனிதனும் உண்ணும் காட்சி காண்போரை அதிர்ச்சியடையச் செய்தது :
திருவள்ளூர் நவ 09 : பொருளாதாரத்தில் நலிவடைந்த குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைத்திட வகைசெய்திடவும், ஊட்டச்சத்து குறைபாடுள்ள பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்குவதன் மூலமும் கல்வித்தரத்தை மேம்படுத்துதல். பள்ளி பயிலும் மாணவ, மாணவியர் கல்வி இடைநிறுத்தம் செய்வதை தடுத்திடவும் கொண்டு வந்த திட்டம் தான் சத்துணவு திட்டம். 1957-ல் காமராஜர் முதல் , எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரால் கொண்டுவரப்பட்ட இந்த சத்துணவு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகரின் மையப் பகுதியில் உள்ள மேல் நிலைப்பள்ளியில் திருத்தணி மற்றும் சுற்றுவட்டரா கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவிகள் என 2 ஆயிரம் பேர் வரை பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் பயிலும் 400 மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மாணவிகளுக்கு பிரிஞ்சி சாதம் வழங்கிய நிலையில் மீதமான உணவை பள்ளி அருகே சுவர் ஓரத்தில் கொட்டியுள்ளனர்.
இந்த உணவை அங்கு சுற்றித்திரிந்த நாயும், அதே உணவை ஒரு மன நலம் பாதிக்கப்பட்ட மனிதனும் சமமாக சாப்பிடும் காட்சியை கண்டவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 45 வயது மதிக்க மனநலம் பாதிக்கப்பட்ட அந்த நபர் தெருக்களில் கொட்டப்படும் கெட்டுப் போன உணவு வகைகளை சாப்பிட்டும், இதுபோன்று பள்ளியில் மீதமாகி கொட்டப்படும் உணவையும் சாப்பிட்டு வருவது அப்பகுதி மக்களிடையே ஒரு விதமான நெகிழ்வை ஏற்படுத்துகிறது. மீதமான உணவை, பசியால் வாடுவோருக்கு கொடுத்திருக்கலாம்.
அல்லது விலங்களுக்கு கூட தனியாக கொண்டு சென்று கொடுத்திருக்கலாம். ஆனால் இதை செய்யாமல் பள்ளி சுவர் ஓர் கொட்டிய அந்த உணவை, நாயும்,மனநலம் பாதிக்கப்பட்ட மனிதனும் சாப்பிடும் நிலையை ஏற்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை மீட்டு மாவட்ட நிர்வாகம் நல்வழிப்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.