திருத்தணியில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு வழங்கிய மதிய உணவில் மீதமான உணவை சாலையோரத்தில் கொட்டியதும், அதனை நாயும், மனநலம் பாதிக்கப்பட்ட மனிதனும் உண்ணும் செய்தி அறிவாயுதம் நாளிதழில் வெளியிட்டதன் எதிரொலியால் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ஆதரவற்றோர் மன நலக் காப்பகத்தார் மீட்டனர்.

பதிவு:2022-11-10 09:12:35

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகரின் மையப் பகுதியில் உள்ள மேல் நிலைப்பள்ளியில் திருத்தணி மற்றும் சுற்றுவட்டரா கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவிகள் என 2 ஆயிரம் பேர் வரை பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் பயிலும் 400 மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று மாணவிகளுக்கு பிரிஞ்சி சாதம் வழங்கிய நிலையில் மீதமான உணவை பள்ளி அருகே சுவர் ஓரத்தில் கொட்டியுள்ளனர். இந்த உணவை அங்கு சுற்றித்திரிந்த நாயும், அதே உணவை ஒரு மன நலம் பாதிக்கப்பட்ட மனிதனும் சமமாக சாப்பிடும் காட்சியை கண்டவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இது தொடர்பான செய்தி அறிவாயுதம் நாளிதழில் வெளியிடபட்டது.

இதனையறிந்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உடனடியாக சோழவரம் அடுத்த காரணோடையில் உள்ள ஆதரவற்றோர் மன நல காப்பகத்திற்கு கொடுத்த உத்தரவின் பேரில் அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரீத்தி மற்றும் நலப்பணியாளர் பழனி ஆகியோர் திருத்தணிக்கு சென்று அரசு மருத்துவமனை அருகே படுத்துக்கொண்டிருந்த அந்த மனநலம் பாதித்த நபரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, மன நல ஆலோசகரிடம் காண்பித்து முறைப்படி ஆதரவற்றோர் மன நல காப்பகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

தாடியும், வளர்ந்த தலைமுடியையும் சுத்தம் செய்து, அவரிடம் மன ரீதியிலான பாதிப்பு குறித்தும், அவரது குடும்பத்தார் குறித்து கேட்டறிந்து அவரது குடும்பத்தாரிடம் சேர்த்து வைக்க முயற்சிப்போம் என்றும் முடியாத பட்சத்தில் காப்பகத்தில் வைத்து பராமரிக்கப்படுவார் எனவும் காப்பகம் சார்பில் தெரிவித்தனர்.