திருவள்ளூர் அருகே 22 கிலோ கஞ்சாவை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பதிவு:2022-11-10 09:16:13

திருவள்ளூர் அருகே 22 கிலோ கஞ்சாவை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருவள்ளூர் அருகே 22 கிலோ கஞ்சாவை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருவள்ளூர் நவ 09 : திருவள்ளூர் மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில், திருவாலங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி வெங்கடாபுரம் கூட்டு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருவரை பிடித்து சோதனையிட்டதில் அவர்களிடம் 22 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரித்ததில் அவர்கள் திருப்பூர் மாவட்டம் வையாபுரி கிராமம் படையப்பா நகரைச் சேர்ந்த ராஜு மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் கடமலை குண்டு பகுதியில் வசிக்கும் முருகானந்தம் என்பது தெரிய வந்தது. எனவே இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

தற்போது இவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி., பா.சிபாஸ் கல்யாண் பரிந்துரையின் பேரில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் மேற்படி இருவரையும் குண்டா சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.