திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் : மாவட்ட தேர்தல் அலுவலர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டார்

பதிவு:2022-11-11 10:09:50



திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் : மாவட்ட தேர்தல் அலுவலர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டார்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் : மாவட்ட தேர்தல் அலுவலர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டார்

திருவள்ளூர் நவ 10 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் 01.01.2023-ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டு பேசினார்.

வரைவு வாக்காளர் பட்டியல் திருவள்ளுர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்ட அலுவலர், திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி மற்றும் அம்பத்தூர் மற்றும் மண்டல அலுவலர்-1, மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர், மண்டல அலுவலர்-7 மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி, அம்பத்தூர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களான வட்டாட்சியர் அலுவலகங்கள், ஆவடி மாநகராட்சி மற்றும் திருவள்ளுர் நகராட்சி அலுவலகங்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களான 3657 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள 1290 பள்ளிகளில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

மேலும், வாக்காளர் பட்டியலானது ஒவ்வொரு பாகத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமும் உள்ளது. மேற்குறிப்பிட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியல் 2023-னை பொதுமக்கள் பார்வையிட்டு பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், இடமாற்றம் போன்ற விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிப்பூண்டி தொகுதியில் 330 வாக்குச் சாவடிகளில் ஆண்கள் 134143 பேர், பெண்கள் 140453 பேர், மாற்று பாலினத்தவர் 40 பேர் என மொத்தம் 274636, வாக்காளர்களும்,பொன்னேரி தொகுதியில் 311 வாக்குச் சாவடிகளில் ஆண்கள் பேர், 128909 பெண்கள் பேர், 135016 மாற்று பாலினத்தவர் 36 பேர் என மொத்தம் 263961 வாக்காளர்களும்,திருத்தணி தொகுதியில் 330 வாக்குச் சாவடிகளில் ஆண்கள் 137563 பேர், பெண்கள் 142832 பேர், மாற்று பாலினத்தவர் 31 பேர் என மொத்தம் 280426 வாக்காளர்களும், திருவள்ளுர் தொகுதியில் 296 வாக்குச் சாவடிகளில் ஆண்கள் 129734 பேர், பெண்கள் 136138 பேர், மாற்று பாலினத்தவர் 29 பேர் என மொத்தம் 265901 வாக்காளர்களும், பூந்தமல்லி தொகுதியில் 387 வாக்குச் சாவடிகளில் ஆண்கள் பேர், 174810 பெண்கள் பேர்,181300 மாற்று பாலினத்தவர் பேர், 68 என மொத்தம் 356178 வாக்காளர்களும், ஆவடி தொகுதியில் 436 வாக்குச் சாவடிகளில் ஆண்கள் 217630 பேர்,பெண்கள் 221610 பேர், மாற்று பாலினத்தவர் 102 பேர் என மொத்தம் 439342 வாக்காளர்களும், மதுரவாயல் தொகுதியில் 440 வாக்குச் சாவடிகளில் ஆண்கள் 218112 பேர், பெண்கள் 214592 பேர், மாற்று பாலினத்தவர் 134 பேர் என மொத்தம் 432838 வாக்காளர்களும், அம்பத்தூர் தொகுதியில் 349 வாக்குச் சாவடிகளில் ஆண்கள் 185485 பேர், பெண்கள் 185763 பேர், மாற்று பாலினத்தவர் 88 பேர் என மொத்தம் 371336 வாக்காளர்களும், மாதவரம் தொகுதியில் 467 வாக்குச் சாவடிகளில் ஆண்கள் 217961 பேர், பெண்கள் 220296 பேர், மாற்று பாலினத்தவர் 103 பேர் என மொத்தம் 438360 வாக்காளர்களும், திருவொற்றியூர் தொகுதியில் 311 வாக்குச் சாவடிகளில் ஆண்கள் 142258 பேர், பெண்கள் 146056 பேர், மாற்று பாலினத்தவர் 142 பேர் என மொத்தம் 288456 வாக்காளர்கள் என வரைவு வாக்காளர் பட்டியல் 2023-ன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் 3657 வாக்குச் சாவடிகளில் ஆண்கள் 1686605 பேர், பெண்கள் 1724056 பேர், மாற்று பாலினத்தவர் 773 பேர் என மொத்தம் 3411434 வாக்காளர்கள் உள்ளனர்.

மேலும், 01.01.2023-ஆம் தேதியன்று 18 வயதை பூர்த்தி அடையும் ஒவ்வொருவரும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6-ம், பெயர் நீக்கம் செய்ய விரும்புவர்கள் படிவம் 7-ம் வாக்காளர் பட்டியலில் உள்ள எழுத்துப் பிழைகள், முகவரி மாற்றம், தொகுதி மாற்றம் முதலியவற்றிற்க்கு படிவம் 8-ம் தங்களது குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள நியமிக்கப்பட்டுள்ள இடங்களான வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள பள்ளிகளில் 09.11.2023 முதல் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரையிலும், சிறப்பு முகாம் நாட்களான 12.11.2022, 13.11.2022, 26.11.2022 மற்றும் 27.11.2022 ஆகிய சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நேரில் ஆஜராகி படிவங்களை பெற்று பூர்த்தி செய்து பிறந்த தேதி மற்றும் குடியிருப்புக்கான ஆதார ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பிக்கலாம் என கூறினார்.

தொடர்ந்து நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள பள்ளி வளாகங்களில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் - 2023 குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார்.அதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் - 2023 குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் வகையில் நடைபெற்ற நடைப் பேரணியை திருவள்ளூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

திருவள்ளூர் சார் ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி,மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (தேர்தல்) (பொறுப்பு), உதவி ஆணையர் (கலால்) பரமேஸ்வரி, உதவி ஆட்சியர் (பயிற்சி) கேத்தரின் சரண்யா, திருவள்ளூர் நகர்மன்ற தலைவர் உதய மலர் பாண்டியன், தனி வட்டாட்சியர் (தேர்தல்) சு.உதயம்,திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன், பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.