3 ஆரம்ப பள்ளிகளிலும் பூவிருந்தவல்லி எம்எல்ஏ அதிரடி ஆய்வு

பதிவு:2022-11-11 10:14:12



திருவள்ளூர் அடுத்த ஆயலூர் கிராமத்தில் தார் சாலையை ரூ.32 லட்சத்தில் அமைக்க பூமி பூஜை : பூவிருந்தவல்லி எம்எல்ஏ பங்கேற்பு : 3 ஆரம்ப பள்ளிகளிலும் எம்எல்ஏ அதிரடி ஆய்வு

 3 ஆரம்ப பள்ளிகளிலும் பூவிருந்தவல்லி  எம்எல்ஏ அதிரடி ஆய்வு

திருவள்ளூர் நவ 10 : திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆயலூர் கிராமத்தில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

இந்த பூமி பூஜை நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் தலைமை தாங்கினார். ஒன்றியகுழு துணைத்தலைவர் பர்க்கத்துல்லா கான், ஒன்றிய திமுக செயலாளர் ஜெயசீலன், ஒன்றியகவுன்சிலர்கள் சாந்தி தரணி, த.எத்திராஜ் , துணை செயலாளர்கள் கே.கே.சொக்கலிங்கம், தரணி, பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்றத்தலைவர் சி.லட்சுமணன் வரவேற்றார்.

இதில் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பூமி பூஜையில் கலந்து கொண்டு சிறப்பித்தார். சட்டமன்ற உறுப்பினர் நிதி 10 லட்சம், மாவட்ட கவுன்சிலர் தென்னவன் நிதியிலிருந்து ரூ.10 லட்சம், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் சாந்தி தரணி நிதி ரூ. 5லட்சம், ஊராட்சி ஒன்றிய பொது நிதி 7 லட்சம் என மொத்த் ரூ.32 லட்சத்தில் தார் சாலை அமைக்கப்பட உள்ளது.

ஆயலூர் கிராமத்திலிருந்து புன்னப்பட்டு வழியாக காலனி வரை செல்லும் இணைப்பு சாலை 780 மீட்டருக்கு இந்த தார் சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த தார் சாலையை அமைக்க கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று தற்போது பூவிருந்தவல்லி எம்எல்ஏ., ஆ.கிருஷ்ணசாமியின் முயற்சியால் அதற்கான பூமி பூஜை நடைபெற்றதால் கிராம மக்கள் எம்எல்ஏவுக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி பரமேஸ்வரன், தொழிலதிபர் கோபிகிருஷ்ணன், நிர்வாகிகள் குருபரதன், சத்தியா, ஜெயபால், பாஸ்கரன், ஏ.பி.வெங்கடேசன், கோபால், முத்துகிருஷ்ணன், மாசி, ஏகாம்பரம், நடராஜ், மூர்த்தி, சண்முகம், முனுசாமி, முரளி, சங்கர், ஏ.கே.கிரி, தேவகி, ஜெயராமன், குப்பன், துரை, தாட்சாயிணி பூங்குழலி ராமு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பூமி பூஜையைத் தொடர்ந்து ஆயலூர் அரசு பள்ளி, கோயம்பாக்கம் ஆரம்பப் பள்ளி, மற்றும் வதட்டூர் ஆரம்பப் பள்ளி ஆகியவற்றில் பூவிருந்தவல்லி எம்எல்ஏ., ஆ.கிருஷ்ணசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் எவ்வளவு மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஆசிரியர்கள் எத்தனை பேர் உள்ளனர். பள்ளிக்கு மாணவர்கள் வருகை குறித்து கேட்டறிந்தார். மேலும் அரசு பள்ளியில் இடை நிற்றல் ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும், மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தை சேர்ந்தவர்கள் என்னென்ன பணிகள் மேற்கொள்கின்றனர் என்பது குறித்து கேட்டறிந்தார்.

கோயம்பாக்கம் தொடக்கப் பள்ளியில் கட்டிடம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். வதட்டூர் பள்ளி மாணவ மாணவிகளிடம் பொது அறிவு குறித்து கேள்விகளை கேட்டும், கடவுள் வாழ்த்து, தேசிய கீதம் பாடச் சொல்லி கேட்டார். தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைவாக இருக்கும் காரணத்தை கேட்டறிந்தார். அருகில் பாக்கம் கிராமத்தில் சேவாலயா தொண்டு நிறுவனம் சார்பில் 1 முதல் பிளஸ் 2 வரை இருப்பதால் குழந்தைகளை அந்த பள்ளியில் சேர்ப்பதாக தெரிவித்தனர். உள்ளூரில் இருக்கும் குழந்தைகளை இங்கேயே சேர்த்து படிக்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்எல்ஏ., ஆ.கிருஷ்ணசாமி கேட்டுக் கொண்டார்.