திருவள்ளூர் அருகே சிற்றம்பாக்கம் கிராமத்தில் தூங்கிக் கொண்டிருந்த கூலி தொழிலாளி மீது மண் சுவரால் கட்டப்பட்ட குடிசை வீடு சரிந்து பலி

பதிவு:2022-11-14 16:13:06



திருவள்ளூர் அருகே சிற்றம்பாக்கம் கிராமத்தில் தூங்கிக் கொண்டிருந்த கூலி தொழிலாளி மீது மண் சுவரால் கட்டப்பட்ட குடிசை வீடு சரிந்து பலி

திருவள்ளூர் அருகே சிற்றம்பாக்கம் கிராமத்தில் தூங்கிக் கொண்டிருந்த கூலி தொழிலாளி மீது மண் சுவரால் கட்டப்பட்ட குடிசை வீடு சரிந்து பலி

திருவள்ளூர் நவ 14 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிற்றம்பாக்கம் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தேவன்(67), கூலித் தொழிலாளி. இவரது மனைவி முனியம்மாள்(60) இவர்கள் மண் சுவரால் கட்டப்பட்ட குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் உணவு அருந்தி விட்டு தேவன், முனியம்மாள் பேரன் சுமித் ஆகிய மூன்று பேரும் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.கடந்த 3 நாட்களாக திருவள்ளூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் பெய்து வந்த கனமழையால் தேவனின் மண் சுவரால் கட்டப்பட்ட ஓலை குடிசை ஈரப்பதம் அதிகரித்து குடிசை வீடு இன்று அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த தேவன்,மனைவி முனியம்மாள் மற்றும் பேரன் சுமித் மீது விழுந்தது.

இதில் தேவன் சம்பவ இடத்திலேயே பலியானார். முனியம்மாள் மற்றும் பேரன் சுமித் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர். அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் முனியம்மாள் மற்றும் பேரன் சுமித்தை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவல் அறிந்த கடம்பத்தூர் சப் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.திருவள்ளூர் அருகே தூங்கிக் கொண்டிருந்த கூலி தொழிலாளி மீது மண் சுவரால் கட்டப்பட்டு வீடு சரிந்து பலியான சம்பவம் சிற்றம்பாக்கம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.