ஏகாட்டூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா : மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

பதிவு:2022-11-15 19:36:47



ஏகாட்டூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா : மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

ஏகாட்டூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா : மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

திருவள்ளூர் நவ 15 : ஆண்டுதோறும் நவம்பர் 14 ஆம் தேதி அன்று நாட்டு மக்கள் அன்போடு நேரு மாமா என்று அழைக்கப்படும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை குழந்தைகள் தின விழாவாக கொண்டாடி வருகிறோம்.அதன்படி திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம்,ஏகாட்டூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு ஒன்றிய கவுன்சிலர் யாமினி துளசிராமன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மாரிமுத்து, வார்டு உறுப்பினர்கள் பாபுலால்,ராமச்சந்திரன், தரணிதேவி அஸ்வினிகாந்த், ஈஸ்வரி ரமேஷ்,திலகுதி ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவை ஊராட்சி செயலாளர் சத்யா வெற்றிவேல் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.கடம்பத்தூர் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மோகன், ரமேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

அதனைத் தெடர்ந்து ஜவஹர்லால் நேரு பிறந்த நாளையொட்டி மாணவ மாணவிகளின் பேச்சு போட்டி,இயல்,இசை,நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.பின்னர் அனைவரும் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் ஆனந்தன்,இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் மணவாளன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

விழாவை ஏகாட்டூர் துளசிராஜன், விக்னேஸ்வரன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தனர்.இதில் ஏராளமான மாணவ மாணவிகள்,பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இறுதியில் ஏகாட்டூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சந்தானலட்சுமி நன்றி கூறினார்.