பதிவு:2022-11-17 23:08:33
திருவள்ளூர் மாவட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பா.ம.க நிர்வாகிகள், முன்னோடிகளுடன் சந்தித்து கலந்துரையாட வருவதையொட்டி பல்வேறு இடங்களில் ஆலோசனை கூட்டம்
திருவள்ளூர் நவ 17 : வருகின்ற 19.11.2022 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தாமரைப்பாக்கம் கூட்டு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் திருவள்ளூர் மேற்கு மற்றும் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள்,முன்னோடிகளுடன் சந்தித்து கலந்துரையாட வருவதையொட்டி அதற்கான ஆலோசனை கூட்டம் மணவாளநகரில் நடைபெற்றது.மேற்கு மாவட்ட செயலாளர் இ.தினேஷ்குமார் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் பாலா என்கிற பாலயோகி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திருவள்ளூர் மாவட்டத்தின் கட்சி பொறுப்பாளர்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாசுக்கு எவ்வாறு சிறப்பான வரவேற்பு தருவது, எவ்வாறு அதற்கான பணிகளை மேற்கொள்வது என்பது குறித்து கட்சி பொறுப்பாளர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.இதில் கவுன்சிலர் நா.வெங்கடேசன், முன்னாள் மாவட்ட செயலாளர் பூபதி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அதே போல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வேலப்பன்சாவடி உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் திருவள்ளூர் மத்திய மற்றும் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள்,முன்னோடிகளுடன் சந்தித்து கலந்துரையாட வருவதையொட்டி அதற்கான ஆலோசனை கூட்டம் அம்பத்தூரில் மத்திய மாவட்ட செயலாளர் கே.என்.சேகர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் செல்வகுமார், தெற்கு மாவட்ட செயலாளர் ஆலப்பாக்கம் சேகர், கிழக்கு மாவட்ட செயலாளர் சிவபிராகாசம்,மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன், ரமேஷ்,ஞானப்பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டு திருவள்ளூர் மாவட்டத்தின் கட்சி பொறுப்பாளர்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களை எவ்வாறு சிறப்பான வரவேற்பு தருவது, எவ்வாறு அதற்கான பணிகளை மேற்கொள்வது என்பது குறித்து கட்சி பொறுப்பாளர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.இதில் பகுதி செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதே போல் திருவள்ளூர் தெற்கு மற்றும் மத்திய கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள்,முன்னோடிகளுடன் சந்தித்து கலந்துரையாட வருவதையொட்டி அதற்கான ஆலோசனை கூட்டம் வானகரம் தெற்கு மாவட்ட செயலாளர் து.சேகர் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் செல்வகுமார் கலந்து கொண்டு கூட்டம் எவ்வாறு நடத்தி,சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.
இதில் மாவட்ட தலைவர் ரமேஷ்,மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன்,ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி,காரப்பாக்கம் கன்னியப்பன்,இராமாபுரம் குமார்,பகுதி செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.