பதிவு:2022-11-18 07:37:56
நெடியம் பழைய காலணியில் உள்ள அங்கன்வாடி கட்டிடம் மேற்கூரை சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருப்பதால் குழந்தைகளை கட்டிட வாசலில் தெரு சாலையில் அமர வைத்து பாடம் நடத்தும் அவலம்
திருவள்ளூர் நவ 17 : திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுக்காவிற்கு உட்பட்ட நெடியம் பழைய காலணியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் 25 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த அங்கன்வாடி கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்து எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.<><> இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பெய்த வடகிழக்கு பருவமடையால் மேற்கூறையிலிருந்து நீர் வழிந்து வருவதால் மாணவ மாணவிகள் உள்ளே அமர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து சேதம் அடைந்த மேற்கூரை இடிந்து விழும் அபாயம் இருப்பதால் மாணவ மாணவிகளை அங்கன்வாடி கட்டிட வாசலில், சாலை ஓரத்தில் அமர வைத்து பாடம் எடுக்கக்கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் வட்டாட்சியர் உள்ளிட்ட அனைவரிடமும் புதிய கட்டிடம் கட்டித் தர கோரிக்கை விடுத்ததாகவும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடத்தை கட்டித்தர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.