பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கம் ஊராட்சியில் கடந்த 4 நாட்களாக தண்ணீரில் மூழ்கியுள்ள நியாய விலை கடை : அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் கடும் அவதி

பதிவு:2022-11-17 23:17:03

திருவள்ளூர் நவ 17 : பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாரிவாக்கம் ஊராட்சியில் இயங்கி வரும் நியாய விலை கடையில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து குளம் தேங்கியாதல் கடந்த நான்கு நாட்களாக நியாய விலை பூட்டி கிடப்பதால் அப்பகுதி மக்கள் அரிசி, பருப்பு, சர்க்கரை,உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் கடும் சிறமத்திற்க்கு உள்ளாகி வருகின்றனர்.

தேங்கி இருக்க கூடிய கழிவு நீரை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும் இதுவரை அவர்கள் கழிவுநீரை அப்புறப்படுத்தாமல் அலட்சிய போக்குடன் செயல்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வருகின்றனர். தொடர்ந்து பருவமழை காலங்களில் இது போன்ற நியாய விலை கடைகளில் மழைநீர் குளம் போல் தேங்கி வருவதால் நியாய விலை கடை பூட்டு போட்டு கிடப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

நியாயவிலை கடை தாழ்வான பகுதியில் இருப்பதால் மழைக்காலங்களில் வெள்ள நீர் புகுந்து வருவதாகவும், உடனடியாக இந்த பகுதியில் இருக்கக்கூடிய நியாய விலை கடையை வேறு இடத்திற்க்கு மாற்றி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.