“ஊன்றுகோல்” என்ற தலைப்பில் ஏற்படுத்தப்பட்ட முதியோர் உதவி மையம் : மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார் :

பதிவு:2022-11-23 08:27:53



திருவள்ளூரில் சர்வதேச முதியோர் தின விழாவையொட்டி “ஊன்றுகோல்” என்ற தலைப்பில் ஏற்படுத்தப்பட்ட முதியோர் உதவி மையம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்

“ஊன்றுகோல்” என்ற தலைப்பில் ஏற்படுத்தப்பட்ட முதியோர் உதவி மையம் : மாவட்ட ஆட்சியர்  துவக்கி வைத்தார் :

திருவள்ளூர் நவ 22 : அக்டோபர் 1 முதல் சர்வதேச முதியோர் தின விழா கொண்டாடப்படுவதை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக, “ஊன்றுகோல்” என்ற தலைப்பில் முதியோர்களுக்கு உதவும் வகையில் ஏற்படுத்தப்பட்ட முதியோர் உதவி மையத்தினை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்து, முதியோர்களுக்கு பொன்னாடை அணிவித்து, பழக்கூடை வழங்கி, கௌரவித்தார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு சட்டம் 2007 மற்றும் விதிகள் 2009 செயல்படுத்தப்பட்டு வருகிறது. இச்சட்டத்தில் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலம் ஆகியவற்றிற்கு உத்திரவாதம் மற்றும அங்கீகாரம் அளிக்கப்படும் வகையில் இயற்றப்பட்டுள்ளது. முதிர் வயதில் தங்களின் இயல்பு வாழ்க்கை நல்ல நிலையில் தொடர்வதற்காக தங்களது வாரிசுகளிடமிருந்து பராமரிப்புத் தொகை அதிகபட்சமாக ரூ.10,000-ம் வரையில் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்தொகையானது உணவு, உடை, தங்குமிடம், மருத்துவ வசதி மற்றும் சிகிச்சை ஆகிய செலவுகளை ஈடுகட்டுவதற்காக வழங்கப்படுகிறது. 18 வயது பூர்த்தியடைந்த தங்களின் சொந்த பிள்ளைகளிடமிருந்தும், பேரன், பேத்திகளிடமிருந்தும் பராமரி;ப்புத் தொகை மற்றும் எழுதி வைத்த சொத்துக்களினை திரும்ப பெறுவதற்கான இச்சட்டத்தி;ல் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளுர் மாவட்டத்தில் இச்சட்டத்தின் கீழ் 2022-ம் ஆண்டில் தற்போது வரை 89 மனுக்கள் மூத்த குடிமக்களின் மூலமாக வரப்பெற்று, 41 மனுக்கள் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம் விசாரணை மேற்கொண்டு சமரசம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் உரிய விசாரணையின் அறிக்கையுடன் சம்மந்தப்பட்ட தீர்ப்பாய அலுவலர்,வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதியோர்களின் நலன் கருதி, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் அளிக்கும் மனுக்களின் மீது உடனுக்குடன் மருத்துவ வசதி, தங்குவதற்கான வசதி மற்றும் ஆலோசனை வழங்குவதற்காக “ஊன்றுகோல்” என்ற பெயரில் முதியோர்களுக்கான உதவி மையம் மாவட்ட ஆட்சியரால் துவக்கி வைக்கப்பட்டது.

பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களுக்காக 14567 மற்றும் 181 என்ற இலவச உதவி எண்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களுக்கான உதவி மையம் துவங்கப்படுவதுடன், 2022-ம் ஆண்டிற்கான சர்வதேச முதியோர் தின விழா மாவட்ட ஆட்சியர் தலைமையில் கொண்டாடப்படுகிறது.

இதில் மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) ச.க.லலிதா, ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவன இயக்குநர் ஸ்டீபன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.