திருவள்ளூர் மாவட்டத்தில் கோடைக்கால நீச்சல் பயிற்சி : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :

பதிவு:2022-04-16 07:39:30



திருவள்ளூர் மாவட்டத்தில் கோடைக்கால நீச்சல் பயிற்சி : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :

திருவள்ளூர் மாவட்டத்தில் கோடைக்கால நீச்சல் பயிற்சி : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :

திருவள்ளூர் ஏப் 16 : திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அமைந்துள்ள நீச்சல் குளம் 5 வருடமாக செயல்பட்டு வருகிறது.நீச்சல் விளையாட்டு தெரிந்தவர்களுக்கு, போட்டியில் கலந்து கொள்ள ஏதுவாக அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. நீச்சல் தெரியாதவர்களுக்கு கோடைக்காலங்;களில் 12 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. நீச்சல் குளம் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை (திங்கட்கிழமை) தவிர இயங்கி வருகிறது.

கோடைக்கால பயிற்சி ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலங்களுக்கு நடத்தப்படும். நீச்சல் தெரியாதவர்களுக்கு கோடைக்கால பயிற்சியாக 12 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். அதற்கான கட்டணம் ஒரு நபருக்கு. ஒரு மணி நேரத்திற்கு ரூ.1200 மற்றும் ஜி.எஸ்.டி. வசூல் செய்யப்படும்.

கோடைக்கால நீச்சல் 1 வது பயிற்சி முகாம் 16.04.2022 முதல் 30.04.2022 வரை நடைபெறும்.ஏப்ரல் 17,18,25 ஆகிய நாட்கள் விடுமுறையாகும். 2 வது பயிற்சி முகாம் 03.05.2022 முதல் 15.05.2022 வரை நடைபெறும்.மே 9 ம் தேதி விடுமுறையாகும். 3 வது பயிற்சி முகாம் 17.05.2022 முதல் 29.05.2022 வரை நடைபெறும்.மே 23 ம் தேதி விடுமுறையாகும்.4 வது பயிற்சி முகாம் 31.05.2022 முதல் 12.06.2022 வரை நடைபெறும்.ஜூன் 6 ம் தேதி விடுமுறையாகும். 5 வது பயிற்சி முகாம் 14.06.2022 முதல் 26.06.2022 வரை நடைபெறும்.ஜூன் 20 ம் தேதி விடுமுறையாகும்.

மேற்கண்ட அனைத்து பயிற்சி முகாம்களும் காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் 7 மணி முதல் 8 மணி வரையும், மாலை 4 மணி முதல் 5 மணி வரை மற்றும் 5 மணி முதல் 6 மணி வரை நடைபெறும். மேலும், விவரங்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் 7401703482 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.கோடைக் காலத்தினை சிறந்த முறையில் செலவிட வேண்டும் மற்றும் நீச்சல் விளையாட்டினை அவசியம் அனைவரும் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். நீச்சல் கற்று தங்கள் உயிரையும், மற்றவர்கள் உயிரையும் காப்பாற்றி நலமுடன் வாழ்வதுடன் பல்வேறு நீச்சல் போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்று அரசு மற்றும் பொது நிறுவனங்களில் விளையாட்டு இட ஒதுக்கீட்டில் வேலை வாய்ப்பு மற்றும் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு பெற்று பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.