கேபிள் ஆப்பரேட்டர்கள் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பதிவு:2022-11-23 08:41:39



திருவள்ளூரில் அரசு கேபிளில் 3 நாட்களாக இணைப்பு கிடைக்காததால் கேபிள் ஆப்பரேட்டர்கள் தமிழக அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தனிவட்டாட்சியரிடம் மனு :

கேபிள் ஆப்பரேட்டர்கள் தமிழக அரசை கண்டித்து  ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் நவ 22 : திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக அரசு கேபிள் மூலம் வழங்கப்பட்ட இணைப்பு தொழில்நுட்ப கோளாறு காரணமாக துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கேபிள் ஆப்பரேட்டர்கள் திருவள்ளூரில் உள்ள தனி வட்டாட்சியர் (கேபிள் டிவி) அலுவலகம் முன்பு அரசு கேபிள் மூலம் வழங்கப்பட்ட இணைப்பு சரியாக வழங்கக்கோரியும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்பொழுது அவர்கள் கூறுகையில் மக்கள் செலுத்தும் பணத்தை கேபிள் ஆப்பரேட்டர்கள் தமிழக அரசுக்கு செலுத்தும் பணத்தை அரசு மென்பொருள் சேவைக்கு சரிவர செலுத்ததால் இந்த துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,கடந்த ஆட்சியில் 40 லட்சம் வாடிக்கையாளர்கள் இருந்தனர்.தற்பொழுது இந்த ஆட்சியில் 13 லட்சமாக குறைந்துள்ளதாகவும், தொடர்ந்து இதே நிலை நீடித்தால் வாடிக்கையாளர்கள் அரசு கேபிளை விட்டு சென்று விடுவர் என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து திருவள்ளூரில் உள்ள தனி வட்டாட்சியர் (கேபிள் டிவி) மணிவாசகத்தை நேரில் சந்தித்து மனு அளித்தனர். கடந்த 3 நாட்களாக அரசு கேபிள் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதே நிலை நீடித்தால் அரசு கேபிள் இணைப்பிலிருந்து தனியார் கேபிளுக்கு சென்றுவிடுவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே அரசு கேபிள் இணைப்பை சரி செய்து வழங்கிட வேண்டும் என கேபிள் ஆப்பரேட்டர்கள் கோரிக்கை விடுத்தனர்.தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு விரைவில் சரி செய்யப்பட்டு மீண்டும் இணைப்பு வழங்கப்படும் என தனிவட்டாட்சியர் தெரிவித்ததார்.