திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து ஆந்திராவுக்கு கடத்த இருந்த ஒரு டன் 230 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைப்பு

பதிவு:2022-11-24 10:22:03

திருவள்ளூர் நவ 23 : திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து ஆந்திராவுக்கு ஆட்டோ, கார் ,வேன், லாரி போன்ற வாகனங்களில் ரேசன் அரிசி கடத்தி வருவது தொடர் கதையாக இருப்பதால் தமிழக அரசின் உத்தரவின் பேரில் காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலையடுத்து ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் செந்தில் குமரேசன் உத்தரவின்பேரில் , உதவி ஆணையர் ஏ.கே.பிரிட் அறிவுறுத்தலின் பேரில் இன்ஸ்பெக்டர் கே.பி.செபாஸ்டின் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் ஜி. விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது நடைமேடையில் ரயில் மூலம் கடத்துவதற்காக வைத்திருந்த சுமார் ஒரு டன் 230 கிலோ எடை கொண்ட 41 மூட்டை ரேஷன் அரிசியை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனால் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் போலீசார் வருவதை கண்டதும் தப்பி ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து ரேசன் அரிசி கடத்தல் குறித்து வழக்குப்பதிவு செய்து, கடத்திய நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசி மூட்டையை திருவள்ளூரில் உள்ள நுகர் பொருள் வாணிபக் கிடங்கில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஒப்படைத்தனர்.