திருத்தணி அடுத்த திருவலாங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத தெப்பத் திருவிழா

பதிவு:2022-11-24 10:24:20



திருத்தணி அடுத்த திருவலாங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத தெப்பத் திருவிழா

திருத்தணி அடுத்த திருவலாங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத தெப்பத் திருவிழா

திருவள்ளூர் நவ 23 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான, திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில், கார்த்திகை மாதம், சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, தெப்பத்திருவிழா நடந்தது.விழாவை ஒட்டி காலை, 10 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தன.

அதனைத் தொடர்ந்து மாலை 7 மணிக்கு கோவிலின் பின்புறம் உள்ள ஆலங்காட்டீசர் சென்றாடு தீர்த்த குளத்தில், தண்ணீர் இல்லாததால் உற்சவர் , வண்டார் குழலியம்மன் உடனுறை வடாரண்யேஸ்வர சுவாமி சிறப்பு அலங்காரத்தில், குளக்கரையை ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தெப்பத் திருவிழாவை முன்னிட்டு பரதநாட்டியம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதில் திருத்தணி முருகன் கோயில் துணை ஆணையர் விஜயா உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். தெப்பத் திருவிழாவை முன்னிட்டு திருத்தணி டிஎஸ்பி தலைமையிலான 177 காவலர்கள பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் தீயணைப்பு துறையினரும் அசம்பாவிதங்களை தவிர்க்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.