பதிவு:2022-04-16 09:42:55
மாநில அளவிலான மூத்தோர் விளையாட்டு போட்டிகள் : திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஜே.சாமுவேல் 2 தங்கம் மற்றும் 1 வெண்கலப் பதக்கம் வென்று சாதனை :
திருவள்ளூர் ஏப் 15 : மாநில அளவிலான மூத்தோர் விளையாட்டு போட்டிகள் மதுரையில் 3 நாட்கள் நடைபெற்றது.இப்போட்டியில் திருவள்ளூர் அடுத்த கைவண்டூர் கிராமத்தை சேர்ந்த ஜே.சாமுவேல் 74 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில் கலந்து கலந்து கொண்டு நீளம் தாண்டுதல் மற்றும் மும்முறை தாண்டுதலில் தங்கப்பதக்கமும், உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் என 3 பதக்கங்கள் வென்று சாதனை படைத்தார்.
அதே போல் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியை சி.சுபா 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டிகளில் மும்முறை தூண்டுதலில் தங்கப்பதக்கமும், நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கமும்,கிறிஸ்டி ஆல்பர்ட் என்பவர் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான 200 மீட்டர் போட்டியில் தங்கப்பதக்கமும்,நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
மேலும் ஸ்வர்ண பிரந்தா என்பவர் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில் குண்டு எறிதலில் வெள்ளி பதக்கமும்,மேரி ஆக்ஸில்யா என்பவர் 55 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில் சங்கிலி குண்டு எறிதலில் வெள்ளி பதக்கமும்,எம்.ஆர்.ராஜேஸ்வரி 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான 100 மீட்டர் போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர்.
அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த வி.சேதுராமன்,டி.சுரேஷ், கே.தமிழரசன்,தங்கதுரை,டி.கந்தன்,சி.மோகன்ராஜ்,ஜி.ராஜி,ட்டி.ரமேஷ்,பி.வி.லத்தீஷ்,ஆல்பர்ட் செல்வகுமார், முகமது சாதிக்,குணசீல சுந்தர் ஆகியோர் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்