திருவள்ளூர் மாவட்டத்தில் பிரிமியர் லீக் (கிரிக்கெட்) மற்றும் சூப்பர் லீக் (கால்பந்து) போட்டிகளை முன்னிட்டு ரூ.12 இலட்சம் மதிப்பீட்டிலான விளையாட்டு உபகரணங்கள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்

பதிவு:2022-11-25 09:55:29

திருவள்ளூர் நவ 25 : திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பாக, மாணவ - மாணவியர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கும் பொருட்டும் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் விதமாகவும் பள்ளி மாணவ மாணவியர்கள் போதை பழக்க வழக்கங்களில் கவனம் செலுத்தாமல் விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் செலுத்தி கல்வியில் சிறந்து விளங்குவதற்காக அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்காக திருவள்ளூர் மாவட்டத்தில் பிரிமியர் லீக் (கிரிக்கெட்) மற்றும் சூப்பர் லீக் (கால்பந்து) போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டும் அதற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளதை முன்னிட்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் 90 குழுக்களைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவ, மாணவியர்களோடு கலந்துரையாடி ரூ.12 இலட்சம் மதிப்பீட்டிலான விளையாட்டு உபகரணங்களை அம்மாணவ - மாணவியர்களுக்கு இலவசமாக வழங்கினார்.

அதன்படி மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாணவர்களை நல்வழிபடுத்தவும், இத்தீமைகளிலிருந்து முழுமையாக அவர்கள் விடுபடவும், மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகளில் கவனத்தைச் செலுத்தி ஆர்வத்தை ஏற்படுத்தவும், பிரிமியர் லீக் (கிரிக்கெட்) மற்றும் சூப்பர் லீக் (கால்பந்து) போட்டிகளில் கலந்துகொள்ள பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மேலும், மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக பள்ளியில் உள்ள உடற்கல்வி ஆசிரியர் தலைமையில் பிரிமியர் லீக் கிரிக்கெட் 32 மாணவர் குழுக்கள், 11 மாணவியர்கள் குழுக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இதுபோலவே சூப்பர் லீக் கால்பந்து 34 மாணவர் குழுக்கள், 13 மாணவியர்கள் குழுக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இந்த 90 குழுக்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் த.ராமன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பூபால முருகன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் நரசிம்மராவ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பவானி, மாணவ, மாணவியர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.