திருவூர் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு செயல்விளக்கம் :

பதிவு:2022-11-27 19:40:03



திருவூர் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு செயல்விளக்கம் :

திருவூர் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு செயல்விளக்கம் :

திருவள்ளூர் நவ 26 : திருவள்ளூர் அடுத்த திருமழிசை கிராமத்தில் திருவூர் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு செயல்விளக்கம் 10 ஏக்கர் நெல் வயலில் செயல்படுத்தப்பட்டது.பெருகி வரும் ஆள் பற்றாக்குறை மற்றும் வளங்குன்றா வேளாண்மையை கருத்தில் கொண்டு, இச்செயல் விளக்கம் செய்யப்பட்டது.

இந்த நானோ யூரியா தெளிப்பதினால் சுமார் 80 விழுக்காடு பயிர்களுக்கு நைட்ரஜன் கிடைக்கும்.நேரடியா இலைவழி மூலம் தெளிப்பானால், இலைத்துளிகள் வாயிலாக விரைவாக செடிகளுக்கு நைட்ரஜன் கிடைக்கிறது. ஏக்கருக்கு 500 மி நானோ யூரியா அல்லது 2.4 மி.லி, லிட்டர் தண்ணீர் என்கின்ற அளவில் நெல் நடவு செய்த 20 - 25 நாட்களிலும், பின்னர் இரண்டாவது முறையாக, முதல் தெளிப்பிலிருந்து 20 -25 நாட்களிலும் நானோ யூரியா தெளிப்பதன் மூலம் பயிருக்கு தேவையான தழைச்சத்து கிடைப்பதுடன்,மண் வளமும் பாதுகாக்கப்படுகின்றது.

மேலும் சுமார் 10 நிமிடங்களில் ஒரு ஏக்கரில் மருந்து தெளித்துவிடலாம். ட்ரோன் வாயிலாக, நீர்வழி உரம் தெளிப்பதன் மூலம், இடுபொருள் செலவு,ஆட் கூலி,நேரம் மிச்சப்படுத்துவதுடன் வளங்குன்றா வேளாண்மைக்கு வழிவகை செய்யப்படுகிறது.

இந்த செயல்விளக்கத்தில் விவசாயிகள்,வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.