திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் சர்வ தேச கராத்தே போட்டியில் தங்க பதக்கம் வென்று சாதனை :

பதிவு:2022-11-27 20:05:46



திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் சர்வ தேச கராத்தே போட்டியில் தங்க பதக்கம் வென்று சாதனை :

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் சர்வ தேச கராத்தே போட்டியில் தங்க பதக்கம் வென்று சாதனை :

திருவள்ளூர் நவ 26 : அண்மையில் துபாயில் சர்வ தேச அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.போட்டியில் இந்தியா, மலேசியா, துபாய், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றன.இந்த போட்டியில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் நேஷனல் கோச், நேஷனல் ஜட்ஜ், ஏழாவது கருப்பு பட்டை பெற்ற கராத்தே பயிற்சியாளர் சுரேஷ் என்பவர் கராத்தே போட்டியில் அவருடைய குரு வேலூர் ரமேஷின் வழிகாட்டுதலின் பேரில் பங்கேற்று, கட்டா குமுதி சண்டை மற்றும் தனித்திறமை ஆகிய இரண்டு பிரிவுகளில் துபாய் வீரருடன் மோதி தங்கம் மற்றும் வெண்கலம் பதக்கங்கள் பெற்று சாதனை பெற்றுள்ளார்.

இவருக்கு அவருடைய சொந்த கிராமமான கடம்பத்தூர் பகுதி மக்கள் ரயில் நிலையத்திலிருந்து மேல தாளங்களுடன் இசை முழங்க, ஆளுயர மாலை அணிவித்து, சிலம்பாட்டம் ஆடி உற்சாகமாக அவருடைய உறவினர்களும் அவருடைய மாணவச் செல்வங்களும் கடம்பத்தூர் கிராமவாசிகளும் ஒன்றிணைந்து அவரை வரவேற்றனர்.

அப்பொழுது அவர், பேசுகையில், நான் சர்வதேச போட்டியில் துபாயில், துபாய் வீரருடன் மோதி தங்கப் பதக்கத்தை பெற்று வந்துள்ளேன். இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட பதக்கங்கள் பெற்றுள்ளேன் .இது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்திற்கு நான் பெருமை சேர்த்துள்ளேன் என்று தெரிவித்தார் .அது மட்டும் இல்லாமல் கடந்த 10 ஆண்டுகளாக ஏழை எளிய மாணவச் செல்வங்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருகிறேன். கராத்தே பயிற்சி நீங்கள் கற்றுக் கொண்டால் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டு பல சாதனைகளை புரியலாம். நம்முடைய உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்து, போதைப் பழக்கத்தில் இருந்து மாணவ செல்வங்களை பாதுகாக்கலாம் என்று தெரிவித்தார்.