திருவள்ளூர் மாவட்ட சமூக பாதுகாப்பு நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் குழந்தைகள் தின விழா மற்றும் குழந்தைகள் உரிமை தினவிழா :

பதிவு:2022-11-27 19:49:03

திருவள்ளூர் நவ 26 : திருவள்ளூர் மாவட்ட சமூக பாதுகாப்பு நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட பள்ளி கல்வித்துறை, ஷெல்டர் டிரஸ்ட் ஆகியவை இணைந்து குழந்தைகள் தின விழா மற்றும் குழந்தைகள் உரிமை தினவிழா ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.இந்த முகாமிற்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் தேன்மொழி முன்னிலை வகித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பயிற்சி ஆட்சியர் கேத்தரின் சரண்யா பங்கேற்று பேசினார். அப்போது, ஒவ்வொரு குழந்தைகளின் எதிர்காலத்திற்கு கல்விதான் முக்கியமாகும். அதனால் தவறாமல் பள்ளிக்குச் செல்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். மேலும், பள்ளியில் ஒழுக்கத்துடன் இருந்து படிப்பில் ஆர்வம் காட்ட வேண்டும். அதற்கு முன்னதாக குழந்தைகள் சத்தான உணவுகள் உட்கொள்ள வேண்டும். அதோடு, விளையாட்டிலும் ஆர்வத்துடன் ஈடுபடவும் அவர் வலியுறுத்தினார்.

இதில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் மூத்த உரிமையியல் நீதிபதி பி.வி.சாண்டில்யன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது, குழந்தைகளுக்கு கட்டாய உரிமைச் சட்டம் உள்ளது. அதனால் கட்டாயம் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும். இதை தவிர்த்து கைப்பேசியில் நேரம் செலவிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு எதிரான செயல் குறித்து கட்டணமில்லா தொலைபேசியில் புகார் தெரிவிக்கலாம் என அவர் தெரிவித்தார். இதில் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் 120 பேருக்கு புத்தக பைகள் ஆகியவைகளையும் அவர்கள் வழங்கினர்.

நிகழ்ச்சியின் நிறைவாக குழந்தைகளுக்கான விளையாட்டு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் குழந்தைகள் நல குழுத் தலைவர் மேரிஅக்ஸீசியா, ஷெல்டர் டிரஸ்ட் நிறுவனர் சாலமன் ராஜா மற்றும் சமூகப் பணியாளர் ஜெயபால், இரவு பள்ளி ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.