வீரகநல்லூர் பகுதியில் 80 குடும்பங்களைச் சேர்ந்த 300 கொத்தடிமை மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.5.80 இலட்சம் செலவில் சிறகுகள் செங்கல் சூளை : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார் :

பதிவு:2022-04-16 09:50:01

திருவள்ளூர் ஏப் 17 : திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட 80 குடும்பங்களைச் சேர்ந்த 300 கொத்தடிமை மக்கள் பயன்பெறும் வகையில் வீரகநல்லூர் பகுதியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக ரூ.5.80 இலட்சம் செலவில் அமைக்கப்பட்ட சிறகுகள் செங்கல் சூளையினை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

மேலும் சிறகுகள் செங்கல் சூளையில் உற்பத்தி செய்யப்படும் செங்கற்களில் S.B.(Siragukal Bricks) என்ற முத்திரையை மாவட்ட ஆட்சியர் பதித்து, செங்கல் சூளையை துவக்கி வைத்து, இண்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் என்ற தொண்டு நிறுவனம் சார்பாக தலா ரூ.10 ஆயிரம் மதிப்பிலான 3 மரம் வெட்டும் இயந்திரங்களை; மூன்று பயனாளிகளுக்கு வழங்கினார்.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் எப்.மல்லிகா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை செயற்பொறியாளர் வி.ராஜவேல்,திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜோதி,எம்.பாபு,வீரகநல்லூர் ஊராட்சித் தலைவர் காதர் பாஷா, இண்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் அரசு தொடர்பு மேலாளர் ஹெலன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.