திருவள்ளூரில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சாரம் குறித்து பல்வேறு துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் :

பதிவு:2022-11-27 19:56:30



திருவள்ளூரில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சாரம் குறித்து பல்வேறு துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் :

திருவள்ளூரில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சாரம் குறித்து பல்வேறு துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் :

திருவள்ளூர் நவ 26 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சாரம் குறித்து பல்வேறு துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி பேசினார்.

கூட்டத்தில் நவம்பர் 25ம் தேதி முதல் டிசம்பர் 23-ம் தேதி வரை மாவட்ட அளவிலும், அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள், கிராம ஊராட்சிகள், மற்றும் தொடர்புடைய பிற துறைகள் மூலம் விழிப்புணர்வு கூட்டம், பேரணி, துண்டு பிரச்சுரம் வழங்குதல், சுவர் விளம்பரம், கோலப்போட்டி, பேச்சுப்போட்டி, பாட்டுப் போட்டி, ஒவியப் போட்டி, பெண்களுக்கான எதிரான வன்முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு திரைப்படங்கள், குறும்படம் தயாரித்தல், இரவில் மெழுகுவர்த்தி ஏந்தி நடப்பயணம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலம் பொது மக்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 18 வயது நிறைவடையாத குழந்தை திருமணங்களை தடுக்கும் பொருட்டு 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவியர்களின் பெற்றோர்களிடம் எங்கள் மகளை குழந்தை திருமணத்தில் ஈடுபடுத்த மாட்டோம் என்ற உறுதிமொழியை அஞ்சல் அட்டையில் அஞ்சல் வழியாக பெற பால்வளத்துறை அமைச்சர்,மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர்களுடன் இவ்விழா தொடங்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் பயிலும் 68,724 மாணவியர்களுக்கு சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மூலம் அஞ்சல் அட்டைகள் வழங்கப்பட்டு, மாணவியர்களின் பெற்றோர்களிடம் உறுதிமொழி ஏற்பு அஞ்சல் அட்டை அஞ்சல் வழியாக (அரசு ஆவணமாக) ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவியர்களுக்கு குழந்தை திருமணம் செய்து வைப்பதற்கான செயல்கள் முன்னதாகவே தடுக்கப்படுகிறது. அத்தகைய நடவடிக்கை மாணவியர்கள் தங்கள் எதிர்காலத்திற்கான உயர்கல்வி பயிலவும், வாழ்க்கையில் சிறந்து விளங்கவும் உறுதுணையாக உள்ளது என்று கூறினார்.

பின்னர் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தில் 68,724 மாணவியர்களின் பெற்றோர்களிடமிருந்து குழந்தை திருமணம் எதிர்ப்புக்கான உறுதிமொழி ஏற்பினை அஞ்சல் வழியாக பெறப்பட்டு பல்துறை அலுவலகங்கள் மற்றும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வினை மேலும் விரிவுபடுத்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அவ்வஞ்சல் அட்டைகள் காட்சிப்படுத்தப்படுகிறது. அவ்வாறு காட்சிப்படுத்தப்பட்ட அஞ்சல் அட்டைகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார்.

இதில் வளர்ச்சி கூடுதல் ஆட்சியரும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலருமான செ.ஆ.ரிஷப்,சார் ஆட்சியர் (பயிற்சி) கேத்ரின் சரண்யா,தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் கோ.மலர்விழி, தனித்துணை ஆட்சியர் பி.ப.மதுசூதணன், மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) லலிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கா.காயத்திரி சுப்பிரமணி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.