திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுசுகாதாரத் துறையின் 100 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி : கூடுதல் ஆட்சியர், எஸ்பி., ஆகியோர் தொடங்கி வைத்தனர் :

பதிவு:2022-11-28 13:57:41



திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுசுகாதாரத் துறையின் 100 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி : கூடுதல் ஆட்சியர், எஸ்பி., ஆகியோர் தொடங்கி வைத்தனர் :

திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுசுகாதாரத் துறையின் 100 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி : கூடுதல் ஆட்சியர், எஸ்பி., ஆகியோர் தொடங்கி வைத்தனர் :

திருவள்ளூர் நவ 28 : தமிழக்ததில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை 1922-ம் ஆண்டு துவக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்தில் வருகிற 5.12.2022 அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நூற்றாண்டு விழாவை துவக்கி வைக்கிறார். இந்த விழாவானது 5.12. 22 முதல் 8.12.22 வரை நடைபெறுகிறது.எனவே இத்துறை சார்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

அதே போல் திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த நூற்றாண்டு விழா தொடர்பாக கடந்த 22.9.22 முதல் 24.9.22 வரை மாவட்ட அளவில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து 12.10.22 அன்று மாவட்ட அளவில் நூற்றாண்டு விழா தீபச்சுடர் பெறும் நிகழ்வும் மாவட்ட கலெக்டரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதனையடுத்து பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டத்தின் சார்பாக மினி மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜவஹர்லால் தலைமை தாங்கினார். நேர்முக உதவியாளர் மோகன் முன்னிலை வகித்தார். இந்த மினி மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை கூடுதல் ஆட்சியரும்,(வளர்ச்சி) மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலருமான செ.ஆ.ரிஷப், மாவட்ட எஸ்பி., பா.சிபாஸ் கல்யாண் ஆகியோர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்த மினி மாரத்தான் ஓட்டப்பந்தயம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலிருந்து தொடங்கி, உழவர் சந்தை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, வழியாக பெரியகுப்பம் டிஇஎல்சி நடுநிலைப் பள்ளி வரை என 5 கி.மீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது. இதில் பொது சுகாதாரத்துறை பணியாளர்கள்,அனைத்துதுறை சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஜிஆர்டி கல்லூரி, டிவிஎம் கல்லூரியில் பயிலும் பயிற்சு சுகாதார ஆய்வாளர்கள் என 200 பேர் கலந்து கொண்டு ஓடினர்.

இப் போட்டியில் சுகாதாரப் பணியாளர் முருகன் முதல் இடத்தையும், சுகாதாரப் பணியாளர் முனிரத்தினம் 2-வது இடத்தையும், எச்.ஐ.வி.,நலப்பணியாளர் ஜெயபிரகாஷ் 3-ம் இடத்தையும் பிடித்தனர். முதல் 3 இடங்களைப் பிடித்வர்களுக்கு சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜவஹர்லால் பரிசு வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை துணை இயக்குனர் அலுவலக 2-ம் நிலைப் பணியாளர்களான மருத்துவர்கள் மோகனசுந்தரம், கார்த்திகேயன், தீபலட்சுமி, மதியழகன், தேவிஸ்ரீ, அஸ்வின், சுப்பிரமணியம், குமார், ராஜேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நலக் கல்வியாளர் கணேசன் நன்றி தெரிவித்தார்.