பதிவு:2022-11-28 14:10:54
திருவள்ளூர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் மூலம் 5 கிலோ எடை கொண்ட சிறிய வணிக இரக சிலிண்டர் விற்பனை திட்டம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார் :
திருவள்ளூர் நவ 28 : திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் மூலம் 5 கிலோ எடை கொண்ட சிறிய வணிக இரக சிலிண்டர் விற்பனை திட்டத்தை துவக்கி வைக்கும் விதமாக சிறு வணிகர்கள், நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்ட சிறு தொழில் செய்யும் ஐந்து சிறு வியாபாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கி இத்திட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.
தமிழ்நாடு முழுவதிலும் உள்ள நியாய விலைக்கடைகளில் அனைத்து பொருட்களும் நல்ல விலையில் தரத்துடன் கிடைக்கும் வகையில் பல்பொருள் அங்காடிகளாக மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நியாய விலைக்கடைகளில் குறைந்த எடையிலான சிறிய வணிக இரக சிலிண்டர் விற்பனை திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.
அதன்படி மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனமான திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் கூட்டுறவு சுய சேவை பிரிவு மற்றும் சிறப்பங்காடிகள் மூலம் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மூலம் 5 கிலோ எடை கொண்ட சிறிய வணிக இரக சிலிண்டர் விற்பனைத் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.இத்திட்டத்தின் மூலம் இடம் பெயரும் தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், சிறு வணிகர்கள், மீனவர்கள் மற்றும் சுற்றுலா செல்வோர் பயனடைவர். 2 கிலோ மற்றும் 5 கிலோ சிறிய வணிக இரக சிலிண்டர்களை பெறுவதற்கு எவ்வித முகவரிச் சான்று சமர்ப்பிக்கத் தேவையில்லை. ஏதேனும் அரசு அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையினை மட்டும் சமர்ப்பித்து இதனை பெற்றுக் கொள்ளலாம்
இந்த சிறிய வணிக இரக சிலிண்டர்கள் பலதரப்பட்ட மக்களும் பயனுறும் வகையில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, 5 கிலோ சிலிண்டரின் விலை ரூ 1587 புதிய இணைப்பிற்கும், சிலிண்டரில் எரிவாயு நிரப்புவதற்கும் ரூ.525 என்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது எனவே, பொதுமக்களாகிய நீங்கள் இந்த அருமையான திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூர்), ஆ.கிருஷ்ணசாமி (பூவிருந்தவல்லி),துரை சந்திரசேகர் (பொன்னேரி), மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, சார் ஆட்சியர் (திருவள்ளூர்) ஏ.பி.மகாபாரதி.கூட்டுறவு துறை மண்டல இணைப்பதிவாளர் தி.சண்முகவள்ளி, திருவள்ளுர் நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சரஸ்வதி சந்திரசேகர், திருவள்ளுர் சரக துணை பதிவாளர்கள் காத்தவராயன், இரா.ரவி, திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன் மற்றும்