பதிவு:2022-11-28 14:16:17
திருவள்ளூரில் மாவட்ட அளவில் கலைத்துறையில் சாதனை படைத்த 30 கலைஞர்களுக்கு விருது மற்றும் காசோலைகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கி கௌரவித்தார் :
திருவள்ளூர் நவ 28 : திருவள்ளூர் தனியார் திருமண மண்டபத்தில் கலை பண்பாட்டு துறை சார்பாக மாவட்ட அளவில் கலைத்துறையில் சாதனை படைத்த 30 கலைஞர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலை விருதுகளையும். காசோலைகளையும் வழங்கி கௌரவித்து பேசினார்.
திருவள்ளூர் மாவட்டத்;தில் கலைமன்றம் மூலம் கலைத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களில் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு கலை இளமணி விருதும், 19 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை வளர்மணி விருது, 36 வயதிலிருந்து 50 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை சுடர்மணி விருது, 39 வயதிலிருந்து 65 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை நன்மணி விருது, 65 வயது மேற்பட்ட கலைஞர்களுக்கு முதுமணி விருது மற்றும் பொன்னாடை வழங்கப்படுகிறது. அந்த வகையில்,திருவள்ளூர் மாவட்டத்தில் 30 கலைஞர்களுக்கு விருது மற்றும் காசோலைகள் வழங்கப்படுகிறது. அந்த கலை என்பது வழிவழியாக பலதலைமுறைகளை கடந்து பயணிக்கிறது.
அதனடிப்படையில், இன்று நம் இளம் கலைஞர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டிகளில் இசை மற்றும் கிராமிய நடனப் போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகள் பெறுகின்றனர். முதல் பரிசாக ரூ.6000-ம், இரண்டாம் பரிசாக ரூ.4500-ம், மூன்றாம் பரிசாக ரூ.3500-ம் என வழங்கப்படுகிறது. பள்ளி செல்லும் சிறார்கள் தங்களை கலைத்துறையில் திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வகையில் பகுதி நேர பயிற்சிகளை வழங்கும் கலை பண்பாட்டுத்துறையின் திருவள்ளுரில் ஜவஹர் சிறுவர் கலைப்பள்ளி விரைவில் தொடங்கப்படவுள்ளது. ஆண்டுக்கு ரூ.200 சேர்க்கை கட்டணமாக செலுத்தி, 5 வயது முதல் 16 வயது வரை உள்ளவர்கள் பயிற்சி பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, கலைத்துறையில் சாதனைப் படைத்த கலைஞர்களை மாவட்ட அளவில் தேர்வு செய்து விருது வழங்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் செயல்படும் மாவட்டக் கலைமன்றம் வாயிலாக திருவள்ளுரில் 30 விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.பால்வளத்துறை அமைச்சர் கலை முதுமணி விருதினை சிலம்பபாட்டக் கலைஞர்கள் பி.சென்னகேசவலு பட்டாபிராம், ர.முருககனி மாதவரம், இசை சொற்பொழிவாளர் பரசு தாமோதரன் திருவள்ளூர், தெருக்கூத்துக் கலைஞர் டி.கே.மதனன் திருவாலங்காடு, நாதஸ்வரக் கலைஞர் எ.பழனி பாடியநல்லூர், ஆர்மோனியக் கலைஞர் டி.மு.பாண்டியன் திருவாலங்காடு ஆகியாருக்கும் கலை நன்மணி விருதினை தேவார ஓதுவார் த.சிவப்பிரகாசம் கொருக்கம்பேடு, நாதஸ்வரக் கலைஞர் க.இரமேஷ் வானகரம், தெருக்கூத்துக் கலைஞர் ஜெ.சதாசிவம் குப்பத்துப்பாளையம், தவில் கலைஞர் பா.கு.வெங்கடேசன் பாகல்மேடு, ஓவியர் க.சக்திவேல் ஆவடி, சிற்பி மு.தியாகராஜன் சின்ன காவணம் ஆகியோருக்கும் வழங்கினார்.
கலைச் சுடர்மணி விருதினை தவில் கலைஞர் பி.கே.வெங்கடேசன், பழையனூர், மிருதங்கக் கலைஞர் கு.வெங்கடேசன் பட்டரைப்பெரும்புதூர், குரலிசைக் கலைஞர் ந.பன்னிர்செல்வம் பட்டாபிராம், தெருக்கூத்துக் கலைஞர் வெ.ரஜினிகாந்த் கூவம், தவில் கலைஞர் கே.எ.சரவணன் வெண்மனபுதூர், சிலம்பாட்டக் கலைஞர் ச.பழமுதிர் பட்டரை கிராமம் ஆகியோருக்கும், கலை வளர்மணி விருதினை தெருக்கூத்துக் கலைஞர் ஞா.ரூபன் பட்டரைபெரும்புதூர், ஓவியர் ஜெ.கீர்த்தி வானகரம், சிலம்பாட்டக் கலைஞர் ல.பிரபாகரன் திருவள்ளுர், பரதநாட்டியக் கலைஞர் ஆ.ஆனந்தராஜ் திருவேற்காடு, நாதஸ்வரக் கலைஞர் பெ.முத்துகுமார் திருவள்ளூர், தவில் கலைஞர் ர.ஜீவா பெத்திக்குப்பம் ஆகியோருக்கும் வழங்கினார். கலை இளமணி விருது பரத நாட்டியத்தில் சிறப்பு பெற்ற ரா.சிவாசினி, ரா.ஸ்ரேயா, க்ஷித்திகா. பி.அ.தீபஸ்ரீ (கிராமிய நடனம்),ரா. வினோதினி (சிலம்பாட்டம்) அ.நந்தினி (தப்பாட்டம்) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
மேலும், இளம் கலைஞர்களின் கலைத்திறமைகளை வெளிக் கொணரும் வகையில் 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர்களுக்கு குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கிராமியக் கலைகள் மற்றும் இசைக்கருவிகள் இசைத்தல் ஆகிய பிரிவுகளில் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படுகிறது. இப்போட்டியில் திருவள்ளூர் மாவட்டத்தில் 15 கலைஞர்கள் தேர்வு பெற்றனர். குரலிசைப் பிரிவில் ச.பிரியங்கா, த.குகன், தி.சாருகேசி கருவியிசை பிரிவில் பெ.முத்துகுமார், ர.ஜீவா, கோ வினோத்குமார், பரதநாட்டிப் பிரிவில் ஆ.ஆனந்தராஜ், ரா.ஷ்ரேயா, ரா.வனமாலிகா கிராமியக் கலைப் பிரிவில், ச.பிரபாகரன், அ.தீபஸ்ரீ ரா.வினோதினி, ஓவியப் பிரிவில், மு.மணிகண்டன், ர.ரோஷினி, ம.மேரி ஏஞ்சல் ஆகியோர் பரிசு பெற்றனர். விழாவில் திருவள்ளுர் மாவட்டக் கலைஞர்களின் பரத நாட்டியம், தப்பாட்டம், பம்பை மேளம், சிலம்பாட்டம் மற்றும் தெருக்கூத்து ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூர்), துரை சந்திரசேகர் (பொன்னேரி), மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, கலை பண்பாட்டு இயக்ககம் துணை இயக்குனர் பா.ஹேமநாதன், திருவள்ளூர் நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சரஸ்வதி சந்திரசேகர், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் சரஸ்வதி ரமேஷ், பல்வேறு இயல், இசை, நாடக, மன்ற கலைஞர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.