திருத்தணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவிகளுக்கு லேப்டாப் வழங்காத நிலையில் வழங்கியதாக கூறியதை கண்டித்து மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு :

பதிவு:2022-11-29 11:46:39

திருவள்ளூர் நவ 28 : திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அரசினர் மகளிர் மேனிலைப் பள்ளியில் கடந்த, 2017-18 ஆண்டு பிளஸ் 2 படித்து முடித்த மாணவிகள் 70 க்கும் மேற்பட்டோர் இன்று பள்ளி வளாகத்தின் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். பிளஸ்2 படித்து முடித்து நான்கு ஆண்டுகள் ஆகியும் லேப் டாப் வழங்கவில்லை என்றும் லிடியா அரசு உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்ததின் பேரில் மாணவிகள் சாலை மறியலை கைவிட்டனர். நாங்கள் படித்த அதே அரசு பள்ளியில் தற்போது படிக்கும் பிளஸ்1, பிளஸ்2 மாணவிகளுக்கு மட்டும் லேப் டாப் வழங்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 படித்துவிட்டு நான்கு ஆண்டுகள் காத்திருந்தும் எங்களுக்கு இதுவரை லேப்-டாப் தரவில்லை. ஆனால் எங்களது மதிபெண் சான்றிதழில் லேப்-டாப் வழங்கப்பட்டது என கையெழுத்து வாங்கிவிட்டதால் விசாரித்து லேப்டாப் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகள் கோரிக்கை விடுத்தனர்.