பதிவு:2022-11-29 11:55:33
ஆவடி அருகே வீட்டில் திருடி மாட்டிகொண்ட வடமாநில திருடனை தரும அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள் :
திருவள்ளூர் நவ 29 : அவடி அடுத்த மோரை ஊராட்சி வீராபுரம் கிராமத்தில் வசிப்பவர் ஜெகன்.இவரது மனைவி குழந்தையை அழைத்து சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட வடமாநில நபர் ஒருவன் அவரது வீட்டில் நுழைந்து பீரோவில் இருந்த சுமார் 7 சவரன் தங்கம் மற்றும் வெள்ளி நகையை திருடியுள்ளான்.
பின்னர் அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த ஜெகனிடமே திருடில் ஈடுபட்ட வடமாநில நபர் லிப்ட் கேட்டுள்ளான்.முன்னதாக வீட்டில் யாரோ மர்ம நபர் திருடி சென்றதாக அக்கம் பக்கத்தினர் ஜெகனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.இதனால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் அவனை சோதனையிட்ட போது திருடில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் அவனை பிடிக்க முயன்றபோது அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளான். அப்பொழுது அங்கு வந்த திமுக ஒன்றிய செயலாளர் தயாளன் என்பவர் அவனை மடக்கி பிடித்துள்ளார்.இதுகுறித்து டேங்க் பேக்டரி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனிடையே திருடில் ஈடுபட்ட வடமாநில நபரை கம்பத்தில் கட்டி வைத்து அடித்து அவனிடமிருந்த நகைகள் மற்றும் 100கும் அதிகமான சாவிகளை கண்டுபிடித்துள்ளனர்.இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டேங்க் பேக்டரி போலீசார் திருடி மாட்டிகொண்ட நபரை பொதுமக்களிடமிருந்து மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .பட்டப்பகலில் வீட்டை உடைத்து நகைகளை திருடி பிடிபட்ட வடமாநில நபரால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.