பதிவு:2022-11-29 12:01:12
ஆவடி அருகே கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்த கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது :
திருவள்ளூர் நவ 29 : ஆவடி அடுத்த கோயில் பாதகை மசூதி தெருவில் வசித்து வருபவர் பூபதி கூலி தொழில் இவர் மனைவி இரண்டு பெண் குழந்தைகளுடன் அப்பகுதியில் வசித்து வந்த நிலையில் இவரது மூத்த மகள் தீபா வயது 17 ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
மாணவி 12 ஆம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி பயின்றதால் தற்பொழுது தமிழ் வழித்துறையை சார்ந்த படிப்பை படித்ததால் அவரால் சரியாக படிக்க இயலாததால் மன உளைச்சலில் இருந்த மாணவி தனது வீட்டில் யாரும் இல்லாத பொழுது தனக்குத்தானே மன்னனை ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.வீட்டில் அருகில் இருந்தவர்கள் மாணவியை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு முதலுதவி செய்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பெற்ற மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் சம்பவம் அறிந்து சென்ற காவல்துறையினர் இது குறித்து ஆவடி டேங்க் பேக்டரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறனர் கல்லூரி மாணவி ஒருவர் தீக்குளித்த சம்பவம் ஆவடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.