பதிவு:2022-11-30 20:54:04
திருத்தணி அருகே தாழ்வாக தொங்கியபடி இருக்கும் உயர் அழுத்த மின் கம்பிகளால் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் :
திருவள்ளூர் நவ 30 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பொம்மராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவருக்கு பொதட்டூர்பேட்டை மாநில நெடுஞ்சாலை அருகில் சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள உயர் அழுத்த மின்கம்பம் ஆபத்தான நிலையில் சாய்ந்து உள்ளது .இதனால் மின் கம்பிகள் 4 அடி உயரத்தில் மிகவும் தாழ்வாக தொங்கிக் கொண்டிருக்கின்றன.
:
இந்த நிலத்தின் வழியாக தினமும் விவசாயிகள் கால்நடைகளை ஓட்டி செல்கின்றனர். இதனால் எதிர்பாராத விதமாக தாழ்வான நிலையில் தொங்கிக் கொண்டிருக்கும் மின் கம்பியில் சிக்கி உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
:
எனவே அசம்பாவிதங்களை தவிர்க்க மின்வாரிய அதிகாரிகள் சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை சரி செய்து விபத்து ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.