பதிவு:2022-11-30 20:57:51
திருத்தணி அருகே மத்திய அரசின் இயற்கை எரிவாயு திட்டத்திற்காக பைப் புதைக்க கிராம மக்கள் எதிர்ப்பு : மத்திய அரசின் திட்டம் என்பதால் கைவிடப்படமாட்டாது என அதிகாரிகள் திட்டவட்டம் :
திருவள்ளூர் நவ 30 : திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த மாமண்டூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசின் இயற்கை எரிவாயு திட்டத்திற்காக திருத்தணி அடுத்த அருங்குளம் கிராமத்திற்கும், மாமண்டூர் கிராமத்திற்கு இடையே எரிவாயு சேமிப்பு கிடங்கும் அமைக்கப்பட்டு உள்ளது. அருங்குளம் கிராமத்தில் இருந்து மாமண்டூர் வழியாக திருத்தணி மற்றும் திருவள்ளூர் ஆகிய ஊர்களுக்கு இயற்கை எரிவாயு கொண்டு செல்ல பைப் லைன் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
:
இதற்கு கிராம மக்கள் இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே 2 முறை பேச்சு வார்த்தை நடத்தியும் அது தோல்வியில் முடிந்த நிலையில் இன்று திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் அஸ்ரத் பேகம், திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ், வட்டாட்சியர் வெண்ணிலை தலைமையில் மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அப்போது இது மத்திய அரசின் திட்டம் என்பதால் தங்கள் எதிர்ப்பு காரணமாக நிறுத்தப்படமாட்டாது என கோட்டாட்சியர் மற்றும் டிஎஸ்பி ஆகியோர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
:
இதனையடுத்து அமைதி பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும் முக்கிய நபர்கள் தாங்கள் மட்டும் எந்த முடிவு எடுக்க முடியாது. எனவே தங்களது கிராமத்தைச் சேர்ந்த அனைவரிடமும் கலந்து ஆலோசித்து விட்டு கருத்து தெரிவிப்பதாக கூறிவிட்டு சென்றனர். மூன்றாவது முறையும் நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமூக முடிவு எட்டாதமல் மீண்டும் தோல்வியில் முடிந்தது. வருகிற டிசம்பர் 1-ந்தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.