திருவாலங்காடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பார்வையிட்டார் :

பதிவு:2022-04-16 10:03:19

திருவாலங்காடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பார்வையிட்டார் :

திருவாலங்காடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பார்வையிட்டார் :

திருவள்ளூர் ஏப் 17 : திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை சார்பாக ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி,பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.பின்னர் திருவாலங்காடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் பார்வையிட்டனர்.

பின்னர் 19 கிராம சுகாதார செவிலியர்களுக்கு தலா ரூ.5,200 வீதம் ரூ.98,800 மதிப்பிலான எடை அளவிடும் இயந்திரம்,இரத்த கொதிப்பு அளவிடும் கருவி,குழந்தை அசைவு மற்றும் இதய துடிப்பு அளவிடும் கருவி ஆகியவற்றை திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.