திருத்தணி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒரு கழிவறை மட்டும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளதால் பயன்படுத்த முடியாமல் மாணவிகள் அவதி

பதிவு:2022-12-01 16:57:58

திருவள்ளூர் டிச 01 : திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஆறுமுகசாமி தெருவில் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1600-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியில் மாணவிகளின் வசதிக்காக இரண்டு கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. இதில் தற்போது ஒரு கழிவறை மட்டுமே மாணவிகளின் பயன்பாட்டிற்கு உள்ளது.

பள்ளியில் பயிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு ஒரு கழிவறை போதுமானதாக இல்லை. மேலும் பள்ளி நிர்வாகம் கழிவறை முறையாக பராமரிப்பது இல்லை என கூறப்படுகிறது. பள்ளியில் சுத்தம் செய்யும் பணியாளர்கள் இல்லாததால் கழிவறை தினசரி சுத்தம் செய்யாமல் துர்நாற்றத்தால் மாணவிகள் அவதிப்படுகின்றனர்.

இயற்கை உபாதைகள் கழிக்க முடியாமல் மாணவிகள் தவிப்பதால் உடல் மற்றும் மனநிலை பாதிக்கப்படுகின்றன. மாவட்ட நிர்வாகம் உடனடியாக பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் கழிவறை ஏற்படுத்த வேண்டும். கழிவறை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரை குமரவேலிடம் கேட்டபோது பள்ளியில் துப்புரவு பணியாளர் பணியிடம் காலியாக உள்ளது. ஆதலால் திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களை கழிவறையை சுத்தம் செய்து தருமாறு நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம். விரைவில் துப்புரவு பணியாளர் நியமித்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்கிறோம் என்று கூறினார்.